பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சிறுவர் நூல்களை மணவையார் பதிப்பித்தார். குழந்தை இலக்கிய விற்பனைகளில் எத்தனை பேருக்கு இந்த அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கும்? அவர்களின் எண்ணிக்கை இரு கை விரல் எண்ணிக்கை அளவு இருக்கலாம் மணவையார் பதிப்பாசிரியர் மட்டுமா? படைப்பாசிரியரும் கூட சிறுவர்களுக்காகச் சிறுகதை கள், நாவல்கள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள் முதலி யன எழுதியுள்ளார். கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கி யுள்ளார். இவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். இவற்றைப் பார்க்கும் போது, படிக்கும் போது மணவை முஸ்தபா குழந்தை இலக்கியக் கோமான் என்பது உண்மையாகிறது உறுதிப்படுகிறது!

மணவையாரின் சிறுவர் இலக்கியச் சேவையின் ஒரு பகுதியாக "விழா தந்த விழிப்பு' புனை கதையை இங்கே ஆய்ந்து பார்க்க விரும்புகிறேன்.

'விழா தந்த விழிப்பு' நாவலின் கதையைக் சுருக்கமாக அறிவோம்.

சிங்காரம் எனும் மாணவன், ஒரு மாணவனுக்குத் தேவையான நல்ல குணங்கள் எதுவுமே இல்லாதவன். அவனுக்குப் பணம் கிடைக்கும். அதனால் எப்போதும் சிற்றுண்டி வாங்கித் தின்று கொண்டே இருப்பான்.

அறிவானந்தம் என்று மற்றொரு மாணவன். அவன் உள்ளம் நல்ல பண்புகளின் இல்லம். ஆனால், ஏழை. தாயார் பலகாரம் சுட்டு விற்பவர். அவளுக்கு உதவியாக, பலகாரங்களைக் கடைகளுக்கு எடுத்துச்