பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 37

அறிவானந்தத்தை உயர்த்தியும் சிங்காரத் தைத் தாழ்த்தியும் முருகு பேசியது மற்ற இருவ ருக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தான் கண்டபடி தீனி தின்பதை நியாயப்படுத்த முயன்

றான் சிங்காரம்.

'கண்டது தின்ன பலவான் ஆவான்' என்பது பழமொழி. அதன்படி நான் கிடைத்ததை யெல்லாம் தின்கிறேன். உடம்பைப் பலப்படுத் தறேன். உடம்பு பலமாக இருந்தால், பின்னால் எவ்வளவோ உழைத்துச் சம்பாதிக்க முடியும். இது தெரியாமல் பேசlயே' என்று பதிலடி கொடுத்தான் சிங்காரம்.

முருகும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவனும் தொடர்ந்து வாதாடினான்.

'கண்டதைத் தின்ன பலவான் ஆவான், என்று நினைத்துக் கண்டதை விழுங்குறே, கடை சியிலே கண்டது தின்ன நோயாளி ஆவான்' என்ற பழமொழிப்படி உன் உடம்பு ஆயிடுது. உனக்குச் செல்லப் பெயரே நடமாடும் நோ யாளி என்பதுதானே!".