பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ஒழுக்க சீலராகவும் அஞ்சாநெஞ்சினராகவும் நம் நாட்டின் பண்பாட்டுச் சின்னமாகவும் விளங்கியவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு காலப் பகுதியை எழுத விழைபவருக்கும் அவருடைய வாழ்க்கை விவரங்கள் இன்றியமையாது தேவைப்படும். இதனை உணர்ந்த சன்மார்க்கத் தலைவர் திரு. நா.மகாலிங்கம் அவர்கள் இந்த வாழ்க்கை வரலாற்றை உருவாக்க முடிவுசெய்து, அப்பொறுப்பை என்னிடம் ஒப்புவித்தார்கள். ஓமந்தூராரை நான் இரண்டு முறை சந்தித்து அவருடன் விரிவாக உரையாடியுள்ளேன். அவருடைய வரலாற்றை எழுது வதற்குப் பயன்படக்கூடிய எந்தச் செய்தியையும் அந்தச் சந்திப்புக்களில் நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. தம் வரலாறு எழுதப்படுவதை அவர் விரும்பவும் மாட்டார்: ஓமந்தூராரின் குடும்பத்தினர், உறவினர்கள், நீண்டகால நண்பர்கள், அவருடன் சிறையில் இருந்தவர்கள், அவர் முதலமைச்சராக இருந்தபோது உயர் பதவிகளில் இருந்தவர்கள், முதலமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள், அவர் நியமித்த அமைச்சர்கள், அவருடைய அரசியல் கட்சியினர்