போட்டோக்களையும் பிளாக்குசளையும் தந்தும் மேலும் இன்னாரைச் சந்திக்கலாம் என்று வாய்ச்சொல் அருளியும் பலர் துணை செய்தனர். வயது முதிர்ச்சியால் நினைவாற்றலை இழந்தவர்கள். என் செவிக்கு உணவு கராத குறையை, வயிற்றுக்கு உணவு ஊட்டி நிறை செய்தனர்! திரு.பகீரதன், திரு. ஊரன் அடிகள், திரு. முலசூர் மாதவ ரெட்டியார், கயப்பாக்கம் ஐமீன்தார் திரு. முத்துலிங்க ரெட்டியார் அவர் தம்பி திரு. முத்துமல்லா ரெட்டியார் ஆகியோர் மன முவந்து செய்த உதவிகள் இன்றும் என்றும் என் நினைவில் இருக்கும். நான் பேட்டி கண்டவர்களில் திரு.டி.எம். நாராயணசாமிப் பிள்ளை, திரு.சேலம் சுப்பிரமணியம், திரு. வரதப்ப செட்டியார் ஆகியோர் இறந்துவிட்டது, மனிதனின் நிலைபாரையை நமக்கு அறிவுறுத்துகின்றது. விவரங்கள் தெரிவித்திருக்கக்கூடிய வேறு பலர், இந்தநூல் எழுதும் திட்டம் உருவாகு முன்னரே உயிர் நீத்துவிட்டனர். நூலின் அமைப்பு முறைக்கும் கூறப்பட்டுள்ள கருத்துக் களுக்கும் நானே பொறுப்பு ஆவேன். ஓமந்தூராரின் கொள்கை களை, அவர் சொற்களிலேயே தெரிவித்துள்ளேன். அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் உண்மை வடிவம், கற்பனையைவிடச் சுவையாக உள்ளது. எனவே, மூக்கு முழி வைக்கும் வேலை இந்த எழுத்தாளனுக்கு ஏற்படவில்லை! சம்பந்தப்பட்டவர் சிலரின் வாழ்த்தையை கையடக்கமாக அடிக்குறிப்பில் இணைத்திருக்கிறேன். நேற்றைய வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கும் அடுத்தற் நிலைமுறையினர்களுக்கும் புரியவைக்க இந்த உத்தியைக் கையாண்டேன். நாடகத்துக்குள் நாடகம்போல, ஒரு வாழ்க்கை வரலாற்றுக்குள் பல வாழ்க்கை வரலாறுகளாக இது அமைந்துள்ளது. இந்த நூல் எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்திருக்கிறது ; வாசகர்களுக்கும் தரும் என்பது என் நம்பிக்கை
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை