பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் இறந்தபோது இவர் அழவில்லை, பரிபக்குவ நிலை அடைந்துவிட்டார். பிணத்தைப் பார்க்கவும் செல்லவில்லை. தம்பியை அனுப்பி ஈமச் சடங்குகளைச் செய்ய ஏற்பாடு செய்தார். பதவி வந்தபோது ஏற்கத் தயங்கினார். மனம் பதவியிலிருந்து விலகியபோது, நிலைகுலையவில்லை. கலங்கவில்லை. "என் பின்னவன் பெற்ற செல்வம் யான் பெற்ற செல்வமன்றோ" என். று இராமபிரான் பரதனிடம் அரசை ஒப்புவித்தார் அல்லவா? அதுபோல திரு பி. எஸ். குமாரசாமி ராஜாவிடம் ஒப்படைத் துவிட்டு, காட்டுக்குச் சென்ற இராமனைப் போலவே "அன்றலர்ந்த செந்தாமரை மலர்" போன்றமுகத்துடன் விவசாயியாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த ஓமந்தூரார் விவசாயியாகவே, தம் பண்ணைக்குத் திரும்பினார். ஆனால், ஹைதராபாத் நிஜாம் தன் சமஸ்தானத்தைச் சுதந்திர நாடாக அறிவித்தபோது, மனம் கலங்கினார். நாட்டுக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்து அஞ்சினார். அல்லும் பகலும் அதே சிந்தனையாக இருந்தார். புதுச்சேரியை இந்திய யூனியனுடன் இணைப்பதில் ஏற்பட்ட காலதாமதமும் ஒமந்தூராருக்குப் பெரும் கவலை கொடுத்தது. புதுக்கோட்டை, புதுச்சேரி, ஹைதராபாத் மூன்று பகுதிகளையும் இந்தியாவில் இணைக்கக் காரணமாக இருந்தவர்களுள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அடுத்த இடம் ஓமந்தூராருக்கு உரியது.