"ஓமந்தூ ராரென்பா ரோப்பியா ரென்பார்கள் நாமங்கள் மேலும் நவிலுங்கால் - சேமஞ்சால் பேருழவின் பண்பால் பெரியவள வென்பாரன் பாரிராம சாமிரெட்டி யார்" 2 குடும்பமும் இளமைக் காலமும் மாவட்டம் தமிழ்நாட்டில் சிறப்புமிக்க மாவட்டம் என்று சொல்லத் தக்கது “தென் ஆர்க்காடு”. அடைமொழியின்றி 'கோயில்' என்னும் சொல்லால் சைவர்கள் போற்றும் சிதம்பரம் இம் மாவட்டத்தில் உள்ளது. தேவாரம் பாடிய அப்பரும், சுந்தரரும், மங்களாசாசனம் பாடிய ஆழ்வார்கள் பலரும், நம்பியாண்டார் நம்பியும், நாதமுனி ஆச்சாரியாரும், மெய்கண்டாரும், மெய்கண்டாருடைய மாணவர் அருள் நந்தி சிவாச்சாரியாரும் அவருடைய மாணவர் மறைஞான சம்பந்தரும், அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியாரும், நாயன்மார்களில் ஒன்பது பேரும், அருட்பா அருளிய இராமலிங்க சுவாமிகளும் அவதரித்தது இம்மாவட்டத்தில்தான். இத்தனை சிறப்புடைய மாவட்டமே ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பிறந்த பெருமையைப் பெற்றிருக்கிறது.
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை