பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டம் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் வடகோடியில் இருப்பது திண்டிவனம் என்னும் வட்டம். இவ்வட்டத்தின் தலைநகர் திண்டிவனம். சங்க நூலான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்' தலைவனாகிய நல்லியக்கோடன் என்னும் சிற்றரசன் ஆட்சிபுரிந்த ஓய்மா நாடு என்று இப்பகுதி கல்வெட்டுக்களில் குறிக்கப் படுகின்றது. சிவபெருமான் கோயில்கொண்ட திண்டீச்சுரம் என்னும் திருக்கோயில் இப்பொழுது திண்டிவனத்தின் உட்கிடை யாக ஒடுங்கியிருக்கும் கிடங்கில் என்னும் ஊர்; இதுவே முன்னாளில் ஓய்மாநாட்டின் தலைநகராக இருந்தது என்கிறார், சொல்லின் செல்வர் பேராசிரியர் டாக்டர் சேதுப்பிள்ளை. இக்கோயிலை இராஜராஜ சோழனும், ஏனைய சோழ மன்னர்களும் ஆதரித்து வந்தனர். திண்டீச்சுரத்தில் நாள்தோறும் இன்னிசை நிகழ்தல் வேண்டுமென்று எண்ணிய இராஜராஜன், வீணைவாசிக்க வல்லுநர் ஒருவருக்கும், வாய்ப்பாட்டில் வல்லுநர் ஒருவருக்கும் நன்கொடை யாக நிலங்கள் வழங்கியதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இராஜராஜன் வெட்டிய ஏரி ஒன்றும் திண்டிவனத்தில் உள்ளது. சிற்றூர் திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் (கிளியனூர் வழியாக) புதுச்சேரிக்குச் செல்லும் சாலையோரமாகச் சற்று தெற்கே அமைந்த சிற்றூர் ஓமந்தூர். இது, ஆரவாரமற்ற கிராமம். சோழர் காலத்திய கல்வெட்டுக்களில் இவ்வூர்ப் பெயர் 'திருச்சுரவி ஓமந்தூர்' என்று பொறிக்கப் பெற்றிருக்கிறது. இரண்டு பழமையான கோயில்கள், கோயில்கள்,ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம், 50, 60 சிறு வீடுகள், அங்குமிங்கும் இடிந்த கட்டிடங்கள், ஊரைச் சுற்றி வயல்கள், தெற்கு நோக்கிப் பார்த்தால் அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்றதும் மயில் வடிவமாக அமைந்த மலை மீது கட்டப் பெற்றதுமான மயிலம் முருகன் கோயில் - இதுதான் இன்றைய ஓமந்தூர். திருச்செந்தூர் முதல் விசாகப்பட்டினத்துக்கு வடக்கே வரை பரந்திருந்த ஒரு மாபெரும் சென்னை இராசதானியின் முதலமைச்சராக இருந்த ஒருவரின் ஊர் இது என்பதற்கு இங்கு 5