பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வித அறிகுறியோ அடிச்சுவடோ இல்லை. இதற்குக் காரணம் இராமசாமி ரெட்டியார் தன்னை, சென்னை இராசதானியின் முதலமைச்சராகக் கருதினாரே தவிர, ஓமந்தூருக்கு முதலமைச்சர் என்று நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், தாம் ஒரு முதலமைச்சர் என்ற சிந்தனைகூட இவருக்கு ஏற்பட்டதில்லை. ஊர்ப் பெயராகிய ஓமந்தூர், இவருடைய பெயருடன் இணைந்து, பிற்காலத்தில் மக்கள் இவரை ஓமந்தூரார் என்றே அழைக்கலாயினர். இக்காரணத்தால் சின்னஞ்சிறு ஓமந்தூர், தமிழ்நாட்டு வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறது. ஓமந்தூரார், தாம் ஒரு கிராமவாசி என்பதை ஒருபோதும் மறக்கவில்லை. 1949 இல் திருவாரூரில் நடைபெற்ற தமிழ் விழாவில் தலைமை உரை நிகழ்த்தும்போது "பாவலனும் நாவலனும் இல்லாத கிராமவாசியும் வேளாளனுமான என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு நன்றி செலுத்து கிறேன்” என்று கூறித் தொடங்கினார். ரெட்டியார்கள் தமிழ்நாட்டுக்கு ஏற்றமும் பெருமையும் அளித்துவரும் இனத்தவர் பலர் ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்குமுன் குடியேறினர். இவ்வாறு குடியேறினவர் களுள் நெல்லூர்ப் பகுதியிலிருந்து வந்து தென் ஆர்க்காட்டிலும், அதன் சுற்றுப் புறத்திலும் உள்ள ஓரளவு வளமான பகுதிகளில் வாழும் பண்ட ரெட்டியார் என்ற இனத்தவர் குறிப்பிடத் தக்கவர்கள். பண்டரெட்டியார் என்பது பண்டகாப்டி ரெட்டியார் கள் என்பதன் சுருக்கமாகும். பண்டகாப்டி என்ற சொற்றொடர் தெலுங்கு மொழியில் உழவர் பெருமக்களைக் குறிக்கும். . இவர்கள் தொன்றுதொட்டு விவசாயிகள் ஆவர். இன்னும் இவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் விவசாயத்தையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். வானம் தரும் மழையை மட்டும் அல்லாது பூமிக்கு அடியில் குமுறும் நீரையும் நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பாட்டாளிகள் என்று ரெட்டியார் களைச் சொல்லலாம். இவ்வாறு உழவுத் தொழிலில் நனிசிறந்து விளங்கும் ரெட்டியார்கள், விருந்தோம்பும் கலையாலும் வல்லவர்கள் ஆவர். "வந்தவர்களுக்குச் சாப்பாடு, வராதவர்களுக்கு உலை என்பது 6