பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளமான நிலங்களும் மனை இடங்களும் இருந்த காரணத்தால் இவர்கள் வீட்டுக்கு 'பெரிய வளைவு' என்ற பெயர் வழங்கி வந்தது. 'ஓ' என்ற எழுத்து இவருடைய ஊரையும் 'பி' என்ற எழுத்து பெரிய வளைவு என்ற குடும்பப் பெயரையும் குறிப்பதாகும். ராமசாமி ரெட்டியாரும் தம் முன்னோர்களைப்போல சில காலம் ஓமந்தூரில் மணியக்காரராக இருந்திருக்கிறார். இந்த முறையில் இவர் பெற்ற நிர்வாக அனுபவம், முதலமைச்சர் பொறுப்பை இவர் திறம்பட நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்தது. ஐ. சி. எஸ். தேர்வில் வெற்றிபெறுபவர்கள் வேலை நியமனம் செய்யப்பெற்ற உடனே, ஒரு சிற்றூரில் மணியக்காரர் முதலிய கிராம அதிகாரிகளுடன் தங்கியிருந்து, கிராம மட்டத்தில் அரசாங்க நிர்வாக முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலமைச்சராக இருந்த போது ஓமந்தூராரிடம் பணியாற்றிப் பின்னர் ஓய்வுபெற்ற ஐ. சி. எஸ். அதிகாரிகள் சிலர் ' வேலையில் சேர்ந்தபோதும் ஒரு மணியக்காரரிடம் வேலை பார்த்தோம். வேலையிலிருந்து விலகிப் போகும்போது ஒரு மணியக்காரரிடம் வேலை பார்த்து ஓய்வுபெறுகிறோம்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். பெற்றோர்கள் . ஓமந்தூராரின் தகப்பனார் பெயர், முத்துராம ரெட்டியார் தாயார் பெயர், அரங்கநாயகி அம்மாள். 1895-ஆம் ஆண்டில் அதாவது ஜெய ஆண்டு தைத்திங்கள் 20-ஆம் நாள் வெள்ளிக்கிழமை யன்று ஓமந்தூரில் பிறந்தார். படிப்பு இவருடைய தகப்பனார் இவரை ஆறாவதுவயதில் ஓமந்தூர்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். நான்கு ஆண்டுகள் சொந்த ஊரில் படித்த பிறகு, தகப்பனார் இவரை 1905-இல் திண்டிவனம் ஆர்க்காட் மிஷனைச் சேர்ந்த வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். இந்தப் பள்ளி தமிழ்நாட்டின் மிகச் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளுள் ஒன்று. வேலூர் மருத்துவமனையை உண்டாக்கிய புகழ்பெற்ற ஐடா ஸ்கட்டரின் தகப்பனாரால் 1872-இல் தொடங்கப்பெற்றது.