இவ்வாறு இராமசாமி ரெட்டியார் நெஞ்சில் சிக்கன மனப்பான்மை உருவானதற்கு சின்னசாமி ரெட்டியாரின் வாழ்க்கையே காரணமாகும். . சின்னசாமி ரெட்டியாருடைய குடும்பத்தின் முன்னேற்றத் திலும் நல்வாழ்விலும் ஓமந்தூரார் தமது இறுதிக்காலம்வரை அக்கறை காட்டினார். சின்னசாமி ரெட்டியாரின் மசன் முத்துராம ரெட்டியார் இதைப்பற்றி இந்நூலாசிரியரிடம் கூறிய பின்வரும் தகவல்கள் குறிப்பிடத்தக்கவை (பேட்டி: 2-12-1977): "என் மச்கள் படிப்பதற்கு ஒ. பி. ஆர். மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என் மகன் ஒருவன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக அவனுடைய படிப்பை நான் நிறுத்திவிட்டேன். அதைக் கேள்விப்பட்டு ஓ.பி.ஆர். அவர்கள், அவன் திண்டிவனத்திலேயே தங்கி அந்தப் படிப்பைத் தனியாகப் படிப்பதற்கும் அடுத்த ஆண்டில் பள்ளியில் படிப்பதற்கும் ஏற்பாடு செய்து, அவனுக்கு ஆண்டுதோறும் 300 ரூபாய் அனுப்பினார்கள். வடலூரில் போய் அவர்கள் நிலையாக இருந்தபோது என் மகன் இன்னொருவன் படிப்பதற்கும் ரூ. 3,000/- அனுப்பினார் கள். அவர்களுடைய வாழ்த்தாலும் உதவியாலும் என் மக்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். என் மாமனார் ரெட்டணை துரைசாமி ரெட்டியார் திடீரென்று நோய்வாய்ப்பட்டிருந்தார். ஓ.பி.ஆர். அவர்கள் உடனே வக்கீல்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உயில் பத்திரம் எழுதச் செய்து தானே சாட்சிக் கையெழுத்துப் போட்டு, பெண் குழந்தைகளுக்கும் உரிய பங்கு கிடைக்க ஆவன செய்தார்கள்." திருமணம் 1910ஆம் ஆண்டில் ஓமந்தூராருக்குத் திருமணமாயிற்று. மனைவி பெயர் சிங்காரத்தம்மாள். இவர்களுடைய மணவாழ்க்கை இனிய முறையில் அமைந்து 1916 ஆம் ஆண்டில் சுந்தரம் என்ற ஒரு மகன் இவர்களுக்குப் பிறந்தான். 1919-இல் ஒரு பெண் குழந்தை பிறந்து, சில நாளில் இறந்துவிட்டது. 1920-இல் மனைவி சிங்காரத்தம்மாளும் இறந்துவிட்டாள். ஓ. பி.ஆருடைய வாழ்க்கையில் வீசிய இரண்டாவது புயல் இது. 'தீதிலள் முதுமகள் 13 .
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை