பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில மொழியிலும் ஓ.பி.ஆருக்கு நல்ல பயிற்சி இருந்தது. சரளமாக ஆங்கிலம் பேசினார். பேச்சிலும் எழுத்திலும் ஒருசில இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இருக்கும். அதற்காக அவர் கூச்சப்பட்டதோ, வருத்தப்பட்டதோ கிடை. யாது. இன்னொருவரை எழுதித் தரச் சொல்வதும் கிடையாது. முதலமைச்சர் என்ற முறையில் தன்னுடைய ஆணைகளையெல்லாம் தாமே தம் கைப்பட எழுதி வந்தார். இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த மவுண்ட்பாட்டன்பிரபு போன்றவர்களைச் சந்தித்த போதும் அவர் தனியாகத்தான் சென்றார். யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. அந்த அளவுக்கு அவருக்குத் தன்னம்பிக்கை இருந்தது. மவுண்ட்பாட்டன் பிரபு : ஹிந்துக்கள் தங்களை ஆளுவதற்கு ஒருபோதும் முஸ்லிம்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிரிட்டிஷார் இந்த நாட்டைக் கைப்பற்று வதற்கு முன்பாக மொகலாயர் ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றது. ஓ.பி.ஆர்: முஸ்லிம்கள் தங்களை ஆள சீக்கியர்கள் ஒரு போதும் விடமாட்டார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்குமுன்னரே ஆப்கானிஸ்தானத் தையும், வடமேற்கு எல்லை மாகாணத்தையும் சீக்கியர்கள் ஆண்டுவந்தார்கள். ஆகையால் அந்தப் பகுதியில் சீக்கியர் களுடைய ஆட்சி மீண்டும் நடைபெற நீங்கள் வழி வகுக்க வேண்டும். ஹிந்துக்களின் நாகரிகமும் பண்பாடும் உருவான மொஹஞ்சதாரோ ஹிந்துக்களிடம் இருக்கவேண்டாமா? தெலுங்கு மொழியில் யாருடனும் உரையாடவேண்டிய அளவுக்கு ஓமந்தூரார் பயிற்சி பெற்றிருந்தார். தெலுங்கிலும் சில நூல்களைப் படித்தார். வேலூர் நாராயண ரெட்டியார் என்ற தெலுங்குப் புலவரை வரவழைத்துத் தெலுங்கு இலக்கிய நயங்களைத் தெரிந்து கொண்டார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது, சில தெலுங்குப் பழமொழி களைச் சொல்லிக்காட்டித் தம் கருத்தை வலியுறுத்துவார். ஓவ 2 17 '