பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைகள் இவரிடம் உதவிகேட்டால் உடனே உதவுவார். ஆனால் வசதி நிறைய உள்ளவர்கள் இவரிடம் வந்து பணம் கேட்டால், “நூறாவலுவாரே ஆறாவலு அடியேக" (100 பசு வைத்திருப்பவன் 6 பசு வைத்திருப்பவனிடம் தானம் கேட்ட மாதிரி இருக்கு) என்ற தெலுங்குப் பழமொழியைச் சொல்லுவார். வேமன சதகம் என்பது வேமனா என்ற கவிஞரால் இயற்றப் பட்ட நூறுபாடல்களின் தொகுப்பு: தமிழில் விவேகசிந்தாமணிக்கு உள்ள பெருமை தெலுங்கில் ம வேமன சதகத்துக்கு உண்டு. அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த நன்னூலை ஓமந்தூரார் மனப்பாடம் செய்தார். வடலூரில் இவர் நிறுவிய குருகுலத்தில் தங்கிப் பயிலும் மாணவர்க்கான விடுதியோடு கூடிய சமையற்கூடத்துக்கு வேமன பெயரை இட்டார். சிறையில் ஹிந்தி படித்தார். ஹிந்தியைப் படிக்கும்படி யாரையும் கட்டாயப் படுத்த வேண்டாம். ஆனால் அந்த மொழியைப் படிப்பது நல்லது என்பது அவர் கருத்தாக இருந்தது, அருட்பா, கீதை, வாசிட்டம், கைவல்யம், தேவாரம். திருவாசகம், பிரபுலிங்கலீலை, திருமூலரின் திருமந்திரம், இரட்சண்ய யாத்திரீகம் முதலிய நூல்களிலிருந்து தமக்குத் தேவையான மேற்கோள்களை எழுதிவைத்துக் கொண்டு அடிக்கடி படித்துப் பார்க்கும் பழக்கமும் ஓ. பி. ஆரிடம் இருந்தது. ஆங்கில அறிவு ஓமந்தூரார் சட்டமன்ற மேலவையில் பிரதமராக முதல் நாள் (21-4-1947) அமர்ந்தபோது, கேள்விகளுக்கு தமிழில் விடைகூறுவதாக மேலவைத்தலைவரிடம் தெரிவித்தார். “பிரதான கேள்விக்கு உரிய பதிலை நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கலாம். ஆனால் துணைக் கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பும்போது, தமிழில் பதில் சொல்லலாம்" என்று மேலவைத் தலைவர் மாண்புமிகு ஆர். பி. இராமகிருஷ்ண ராஜு அறிவித்தார். ஓமந்தூரார் அவைத் தலைவர் கருத்தை ஏற்றுக்கொண்டு, அச்சிட்ட விடைகளை, ஆங்கிலத்தில் படித்தார். ஓமந்தூரார் படித்து முடித்ததும், அவைத் தலைவர் பின்வருமாறு கூறினார்: 18