பதிப்புரை நமது இந்திய வரலாற்றில் காந்தியடிகள் காலம் ஒரு பொற் காலமாகும். காந்தியடிகளால் நல்ல பல தலைவர்கள், நாட்டில் உருவானார்கள். தமிழகத்தில் ஆன்மீகத்துறையில் நால்வர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். அதேபோல தமிழகத்தில் காந்தியடி களால் உருவான அஹிம்சைப் போராட்ட வீரர்களில் அண்ணாச்சி நால்வர். திரு.ந.ம.ரா.சுப்பராமன், திரு.தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். திரு.ஓ.பி. ராமசாமி ரெட்டியார், திரு. சர்தார். அ. வேதரத்தினம் இவர்கள் நால்வரும் அரசியல் தொண்டோடு காந்தியடிகளின் நிர்மாணத் தொண்டிலும் ஈடுபட்டு ஆக்கப்பணிகள் புரிந்து காந்திய வழி நின்றவர்கள். திரு. சுப்பராமன் அவர்கள் மதுரையைச்சுற்றி அந்த நாளிலேயே அரசாங்கம் அரிசன நலத்துறை யை எடுத்துக்கொள்ளும் காலத்திற்கு முன்பே சேவாலயம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அரிசனமாணவர்கள் தங்கிப்படிக்கும் மாணவர் விடுதிகளை நடத்தி தொண்டு செய்கின்றவர்கள். திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கோலையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாலயம் தொடங்கி காந்தியம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் இயக்கம், இவைகளை அடிப் படையாகக் கொண்டு பணியாற்றி வருகின்றவர்கள், திரு.ஓ.பி.ஆர். அவர்கள் வடலூரை முக்கியமாகக் கொண்டு காந்தியம், அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்களின் சுத்த சமரச சன்மார்க்கத்தை குறிக் கோளாகக்கொண்டு நிறுவனம் ஏற்படுத்தி தொண்டாற்றிவந்தவர்கள்,
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை