பின்தங்கிய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் பட்டிதொட்டி தொறும் தேசபக்தியை ஊட்டிய பெருமை ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கு உரியது. 1910 அளவில் சென்னைப் படிப்பை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பி, தாயார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, திருமணம் செய்து கொண்டு நிலபுலன்களைக் கவனித்து வந்தார். இருந்தபோதிலும் இடையிடையே சென்னைக்குச் சென்று அங்கே யுள்ள தன் நண்பர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந் தார் இதனால் நம் நாட்டு அரசியல் நிலைமைகளை இவர் தமது 20-ஆம் வயதிலேயே நன்றாகஅறிந்து கொள்ள வாய்ப்புஏற்பட்டது. இவருடைய நண்பர்கள் சிலர் சென்னை லிங்கிச் செட்டித் தெருவில் கெய்த்னஸ் ஹால் என்னும் மாளிகையில் தங்கிப் படித்தனர். அந்த மாளிகையில் தங்கிக் கொண்டு அருகேயிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்த பலர் பிற்காலத்தில் இந்திய அரசியலில் பெரும் பங்குகொண்டனர். 1 ஆர். கே. எஸ். உடன் சந்திப்பு 1912-ஆம் ஆண்டில் முண்டியம்பாக்கத்திற்கு அருகேயுள்ள இராதாபுரம் என்னும் ஊரில் ஓமந்தூராரின் நண்பர் அப்பாஜி ரெட்டியார் என்பவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு ஆர். கே. சண்முகம் செட்டியார் வந்திருந்தார். 2 1. கிறிஸ்தவக் கல்லூரி 1987-இல் பாரிமுனையிலிருந்து தாம்பரத்துக்கு மாற்றப் பட்டது. 2.ஆர்.கே.சண்முகம் செட்டியார் கோவையில் 1893-இல் பிறந்தவர். மோதிலால் நேருவின் செயலாளராக இருந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய சட்டசபைத்தலைவராகவும், உலகப்பொருளாதார மாநாடுகள் பலவற்றில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இருந்தவர். ஆட்டவா (ஒட்டாவா ) ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பாகக் கையெழுத்திட்டவர். கொச்சி சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர். மகாத்மா காந்தியடிகள் விரும்பியபடி இவர் சுதந்தர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நியமிக்கப் பெற்றார். தமிழ் இசைச் சங்கத்தின் தலைவராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வும் இருந்தவர். 1954 - இல் காலமானார். 22
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை