மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 1919-ஆம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர் திருத்தச் சட்டங்கள்! இந்தியாவெங்கும் அமுலுக்கு வந்தன. அதன் ஒரு கூறாக, அன்றைய சென்னை இராசதானியின்2 லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் தேசபக்தி நிறைந்த இந்தியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆதலால், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தேசியத் தலைவர்கள் கருதினார்கள். எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தென் ஆர்க்காடு மாவட்டத்து வாக்காளர்கள் அதைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வாக்காளர் களைக் கேட்டுக் கொண்டார். தென் ஆர்க்காடு மாவட்டத் தொகுதிக்கு ஜஸ்டிஸ் கட்சி யின் சார்பாக அந்தத் தேர்தலில் இரண்டாவது கட்டுரையில் நாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ள சுப்பராயலு ரெட்டியார் போட்டி யிட்டார். இவர் பெருஞ்செல்வர்; செல்வாக்கு மிக்கவர்; முதலமைச்சராகப் பதவி ஏற்றவர். இவருடைய செல்வாக்கு முதலியவற்றை நன்கு உணர்ந்திருந்தும், இவர் தன் இனத்தவராக 1. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டங்கள் என்பவை மாண்டேகுதுரை செம்ஸ்போர்டு துரை என்ற இரண்டு ஆங்கிலேயர்களால் தீட்டப்பட்ட திட்டம். இந்தச் சட்டங்களின்படி, மாகாணங்களில் சில அதிகாரங்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் இருந்த போதிலும், வேறுசில அதிகாரங்களைச் செலுத்த முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைகள் ஏற்பட்டன. க 2. சென்னை இராசதானி என்பது (1) இன்றைய தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக ஏனைய பகுதிகளையும், (2) இப்போது கேரளமாநிலத்தி லுள்ள கண்ணனூர், கோழிக்கோடு,மலைப்புரம், பாலக்காடு மாவட்டங்களை யும்,(3) இப்போது கர்நாடக மாநிலத்திலுள்ள தென்கன்னட மாவட்டத்தை யும், பெல்லாரி மாவட்டத்தையும்,(4) இப்போது ஆந்திர பிரதேசத்திலுள்ள அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்நூல் ஆகிய ராயலசீமை மாவட்டங்களையும் குண்டூர், கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி, கிருஷ்ணா, பிரகாசம், நெல்லூர், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகிய கடலோர மாவட்டங்களையும், (5) இன்றைய ஒரிசா மாநிலத்திலுள்ள கஞ்சம் மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்தது. 24 அந்நாளில் ஒருசில அதிகாரங்கள் மட்டுமே இராசதானிகளுக்கு இருந்தன. அந்த அதிகாரங்கள்கூட கவர்னரின் நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்த ஆங்கிலேயர்களிடம் இருந்தன. இராசதானிக்கென்று ஒரு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மட்டும் இருந்தது. இந்த அவையில் சரிபாதி ஆங்கிலேயர்களாகவும் மற்ற அதிகாரிகளாகவும் கவர்னரால் நியமனம் செய்யப் பட்டவர்களாகவும் இருந்தனர். மற்றொரு பாதி மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை