பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தும்கூட சற்றும் அஞ்சாமல் ஓமந்தூரார் அந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தனித்தனியாக வாக்காளர்களைச் சந்தித்து "நீங்கள் தேர்தல் சாவடிக்குச் செல்லாதீர்கள். உங்களுடைய வாக்கைப் பயன்படுத்தாதீர்கள். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க இதுதான் வழி” என்று கூறினார். காங்கிரஸ் பிரசாரம் தேர்தல் முடிவடைந்த பிறகு ஓமந்தூரார் அந்த அளவில் அமைதியடையவில்லை. காங்கிரசின் கொள்கைகளைப் பரப்புவதில் அல்லும் பகலும், முனைந்தார். நண்பர்கள் ஐந்துபேரை அழைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக நடந்து சென்றார். இவர்களே தமுக்குப் போட்டு, காங்கிரஸ் பிரசாரம் செய்தார்கள். இக்குழுவினர் வருமாறு: 1. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் 2. இராதாபுரம் அப்பாஜி ரெட்டியார் 3. நெம்மலி வெங்கட்டராம ரெட்டியார் 4. குச்சிபாளையம் சாந்தானந்த ரெட்டியார் (சாந்தானந்த சுவாமிகள்) 5. ரெட்டிக்குப்பம் கோவிந்த ரெட்டியார் 6. முலசூர் மாதவ ரெட்டியார்! நாகபுரி காங்கிரஸ் 1920-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகா சபையின் மாநாடு நாகபுரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குச் சேலத்தின் 1. மூலசூர் மாதவரெட்டியார்: இவர் ஓமந்தூராருக்கு ஆறேழுமாதங்கள் மூத்தவர். 1894-இல் பிறந்தவர். இப்போது மயிலத்தை அடுத்த திருவக்கரை அருகே யுள்ள எறையூர்-நெம்மலியில் வாழ்ந்து வருகிறார். இவர் இளமையில் முலசூரில் இருந்தார். முலதருக்கும் ஓமந்தூருக்கும் 2 கி.மீ. தொலைவு. எனவே, அடிக்கடி இருவரும் சந்தித்தனர். 1916 முதல் 1970 வரை இருவரும் இணைபிரியாது இருந்தனர் என்றும் சொல்லலாம். சென்னையில் முதலமைச்சராக இருந்தபோதும், டில்லியில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த போதும் ஓமந்தூராருடனேயே முலசூர் மாதவ ரெட்டியார் தங்கியிருந்தார். மாதவ ரெட்டியார் மணமாகாதவர். எவ்விதச் சிபாரிசும் செய்யமாட்டார். எனவே ஓமந்தூரார் இவரை உடன் வைத்துக் கொண்டார். 25