ஆகையால் ஒரு வரலாறு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக உயர்வு நவிற்சி முதலிய அலங்காரங்கள் இல்லாமல் ஆனால் மனதில் ஆழத்தில் பதியும் வண்ணம் நூலை அமைத்திருக் கின்றார்கள். காந்தியடிகளுடைய சத்திய சோதனை போல நேரடி யாகவிஷயங்களை அணுகி நன்கு வரலாற்றை உருவாக்கி இருக்கின்றார். கள். இதற்கு அவர்களை எத்துணையும் பாராட்டத்தகும். இத்தகைய நல்ல நூலை நமது குருகுலத்தின் மூலம் கொண்டு வர வேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டேன். இது பற்றி நமது தலைவர். திரு. நா. மகாலிங்கம் அவர்களை அணுகி ஆவலைத் தெரியப் படுத்தினேன். குருகுலமும் அவர்கள் வழியில் வந்து தொண்டாற்றி வருவதால் குருகுலம் இதைச் செய்வது பொறுத்தமாகும் என்று பெரும் உவப்புடன் அவர்கள் இப்பணியினைக் குருகுலத்திற்கு அளித் திருக்கின்றார்கள். அவர்களுக்கு குருகுலம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றது. இப்பணியை செவ்வையாகச் செய்ய நண்பர் பகீரதன் அவர்கள் ஆலோசனையும் உதவியும், என்றுமே உள்ள ஆர்வம் ஊக்கம் இவற் றுடன் கிடைத்து வந்திருக்கின்றது. எங்கள் அனைவரையும் பின்னின்று ஊக்குவித்து பல சிரமங்களுக்கு இடையிலும் முகத்தில் புன்சிரிப்புடன் ஒவ்வொருமுறை நாங்கள் அணுகும் போதெல்லாம் உதவி வரு கின்றார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் எவ்வாறு என்று புரிய வில்லை. நூலாசிரியர் திரு.சோமலே அவர்களும் அவ்வப்போது தக்க ஆலோசனைகள் கூறி நூல் செம்மையாக வர உதவி இருக்கின்றார்கள் அவர்களும் குருகுலத்துடன் தந்தையவர்கள் காலத்தில் இருந்தே தொடர்புடையவர்கள். அவர்களுக்கும் நன்றிக் கடைப்பாடு உடைவர் கள் ஆவோம். தமிழ்ச் சமுதாயம் இந்த மாமனிதரின் வரலாற்றைப் படித்து பயன்பெற வேண்டும் என்று பெரிதும் விரும்புகின்றோம். அதிலும் தற்காலம் இளைஞர்கள் பலவிதமான அரசியல் நிகழ்ச்சிகளால் பாதிப்புற்று நாட்டின் விடுதலை இயக்கத்தின் வரலாறு பற்றி முழுமை யாக தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல வாய்ப்பாகும். தற்காலம் இருக்கும் காகித விலை, நூல் தயாரிக்க ஏற்படும் செலவு இவைகளைக் கணக்கிட்டால் புத்தகத்தில் விலை மிகக் கூடுதலாகி விடும். இருப்பினும் ஓரளவு நிதானப்படுத்தியே விலையும் வைக்கப்பெற்று இருக்கின்றது. எனவே இந்த நூல் மக்கள் பால்
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/6
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை