அணிந்துரை நா. மகாலிங்கம் (இராமலிங்கர் பணிமன்றத்தலைவர்) யுக புருஷர் காந்தி அடிகளின் அடியொற்றி சத்யசோதனை யாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஒரு சில தலைவர்களில் தமிழ் நாட்டில் பிறந்த திரு. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் ஒருவர். காந்தியடிகளை முழுக்க மூழுக்க பின்பற்றி வந்த, வாழ்ந்து சிறந்த உத்தமர். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடன் நெருங்கிப் பழகும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர் அஞ்சா நெஞ்சர். ஒழுக்க சீலர். கொள்கைப் பிடிப்பு உள்ளவர். சத்தியம் தவறாதவர். எளிய வாழ்வை மேற்கொண்டவர். ஆற்றல் மிக்கவர். மனதில் தோன்றும் உண்மையைத் தயங்காமல் சொல்லக்கூடியவர். இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும், வள்ளலாரிடமும் பரம பக்தி கொண்டவர். நமது நாட்டின் மிகப்பெரிய தொழிலான விவசாயத் தொழிலின் நுட்பங்களை நன்கு அறிந்த நிலையான விவசாயி. தரிசு நிலங்களை உழுது வெற்றிக்கொண்ட பண்ணைப் புலவர். வேளாண்மை பண்டிதர், அடக்கமே உருவானவர். ஆழ்ந்த அறிவாளி. நிறைகுடம். படோடோபம், பகட்டு, போலி விளம்பரங்கள் இன்னதென்றே அறியாதவர்.
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை