பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - விவாகமானவர்களுக்கு - கனக் கஷ்டப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணுவது தவறு. அதிலும் கர்ப்பத் தடையை அனுஷ்டிக்கத் தீர்மானிக்கும் கன்னவன், மனைவியின் சுகத்தையும் உத்தேசித்துத் தானே அப்படித் தீர்மானிக்கிருன்; அப்படிப்பட்டவன் அவளை அதிம் மாகக் கஷ்டப்படுத்தி விடுவான் என்று எண்ண முடியுமா? ஆயினும் மனைவியின் நலத்தையோ விருப்பத்தையோ கருதர்மல் நடக்கும் கணவர்களும் உண்டு. ஆல்ை, அப்படிப் பட்டவர்கள் குழந்தை பிறந்துவிடுமோ என்று அஞ்சப் போகிரு.ர்களா? அவர்களுக்குக் கர்ப்பத்தடை முறைகள் தெரிந்திருந்தாலும் தெரிந்திராவிட்டாலும் ஒன்றுதான். ஆண் மட்டுமன்று, ஆணும் பெண்ணும் சேர்ந்தே அளவுகடந்து சிம்பேர்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் ஆட்சேபம் கூறுகிருர்கள். அதுவும் தவறு. தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருடைய நலத்தை மற்ற வர் கவனிக்கக் கூடியவர்களாக இருந்தால் குழந்தை உண்; டாகாது என்பதைக் கொண்டு, அளவு கடந்து சம்போகம் செய்துவிட மாட்ட்ார்கள். அளவு கடந்து சம்போகம் செய் தால் ஆணுக்கே ஆதிகமான நஷ்டமும் பலவீனமும் உண் டாகும். இதைப் புருஷனிடத்தில் அன்புள்ள எந்த மனை வியும் விரும்பமாட்டாள். அன்பு வார்த்தைகள் கூறித், தடுக்கவே செய்வாள். இப்படிக் கர்ப்பத்தடை முறைகள் தெரிந்து விட்டால் புலன்ட்க்கம் இல்லாமற் போய்விடும் என்று கூறுகிருர்களே, அவர்கள் விஷ்யம் அறியாதவர்கள் என்றே தோன்றுகிறது. சாதாரணமாக இப்பொழுது நடைபெற்றுவரும் மண வாழ்க்கையைக் கவனித்தால் கர்ப்பத்தடை முறையை அனுஷ்டிக்க விரும்புகிறவர்களே கர்ப்பத்தடை முறைகளை அலுவுடிக்காதவர்களைவிட அதிகமான அடக்கம் உடைய வர்கள். கர்ப்பத்தடை முறைகளை அனுஷ்டிக்காதவர்கள் ஆசை எழுந்த சமயமெல்லாம் சம்போகம் செய்வார்கள். ஆனல் கர்ப்பத்தடை முறைகளே அனுஷ்டிப்பவர்கள் ஆசை எழுந்தாலும் கர்ப்பத்தடைக்கான சாதனங்கள் கைவச மில்லாவிடில் அந்த ஆசையைஅடக்கிக்கொண்டு சம்போகம் செய்யாமல் இருந்து விடுவார்கள்.