பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - விவாகமானவர்களுக்கு - காட்டினல் மட்டும் போதாது. அந்தப் பெண் கர்ப்பத் தடையை உபயோகிக்கு முன்னதாகவே மலடாக இருந் தாலும் இருக்கலாம். அல்லது அவள் வயதாகி குழந்தை பெறும் சக்தி குன்றிப்போயிருக்கலாம், அல்லது அவளு ட்ைய பெண்குறி அதிகப் புளிப்புச் சத்துடையதாகயிருந்து கர்ப்பத்தடை மருந்துகளைப்போல் சுக்கில உயிர்களைக் கொன்று கொண்டிருக்கலாம். ஆதலால் வயது ஆரோக்கியம் வாழ்வு முறை ஆகிய வற்றில் ஒரே விதமான பெண்கள் பலரை இரண்டு வகுப் பாக்ப் பிரித்து வைத்துக்கொண்டு அவர்களில் ஒரு வகுப் பாரை கர்ப்பத்தடையை அனுஷ்டிக்கும்படியும் மற்ருெரு வகுப்பாரை அனுஷ்டிக்காதபடியும் செய்து அதன் பலன் களைப் புள்ளி விபரங்களாகச் சேகரித்து ஆராய்ந்தால் மட்டுமே இது விஷயத்தில் உண்மை தெரிய முடியும். இத் தகைய புள்ளி விபரங்கள் தரும்வரை, கர்ப்பத்தடை மல டாக்கும் என்னும் வாதத்தை ஒப்புக்கொள்ள முடியாது. இதுவரை கிடைத்துள்ள சான்றுகள் எல்லாம் கர்ப்பத் தடையால் குழந்தை பெறும் சக்தி அதிகப்படுகிறது என் பதையே காட்டுகின்றன என்று டாக்டர் பீல்டிங் கூறுகிரு.ர். அது மட்டுமன்று. சாதாரணமாக மலட்டுத் தன்மை உண்டாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள. அந்த இரண்டும் கர்ப்பத்தடை உபயோகத்தால் உண்டாக மாட்டா. அதஞல் கர்ப்பத்தடை மலடாக்கும் என்று கூறு வதற்குப் பதிலாக மலடாவதைத் தடுக்கும் என்று கூறுவதே பொருந்தும். - அந்த இரண்டு காரணங்கள் (1) பெண் ஜனனேந்திரி யங்கள் விஷப்படுதல் (2) கிரந்தி நோய். - இந்த இரண்டும் ಶ್ದಿ நீக்கமுடியாத மலட்டுத் தன்மையை உண்டாக்கும் கொடிய வியாதிகளாகும். இந்த இரண்டையும் அணுகவொட்டாமல் தடுக்கும் கர்ப்பத்தடை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, எவ்வளவு அவசியமானது, எவ்வளவு பயனுள்ளது என்று யோசித்துப் பாருங்கள். பெண்க்ளின் ஜனனேந்திரியங்கள் விஷப்படுவதற்கு இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்கள் உள. :