பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

8

இந்தப் போக்கினால், ஆணுக்கு அதிகச் செலவு, மணமுறிவு, பெண்ணுக்குப் புதிய தொல்லைகள், பொறுப் பற்ற தனத்தினால் விளையும் தீங்குகள், குழந்தைகளின் வளர்ப்பில் மோசமான நிலைமை, குழந்தை மனப்பண்பு பாதகமடைதல் முதலிய எவ்வளவோ கஷ்டநஷ்டங்கள் உண்டாகின்றன. இவற்றை நாகரிக சமுதாயம் உணர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் அதிகமாக விவாக ரத்துகள் நடப் பதற்குக் காரணம், அவர்களது பொறுப்பற்றதனமும் புதுமை மோகமும் மாத்திரம் அல்ல. சட்டமும் துணை புரிகிறது என்றே சொல்ல வேண்டும்.

அங்கு, விவாக ரத்து கோருவோர், கணவனாக இருந்தால் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்று சாட்சியத்துடன் மனுச் செய்து கொண்டால் போதும். அத்துடன், அவளுக்கு ஒரு தொகையைக்

கொடுத்து விடவும் தயாராக இருக்கவேண்டும். மனைவி

விவாக ரத்து வேண்டினால், அவளும் அவ்விதமே செய்ய வேண்டும்.

விவாக ரத்து பெற விரும்புகிறவர்களுக்கு உதவி புரிவதற்காகவே கூலிக்கு காதல் நடிப்பு நடிக்கக் காத் திருக்கும் ஆண் பெண்கள் அதிகப் பேர் இருக்கிறார் கலாம் அமெரிக்காவிலே. முன் ஏற்பாட்டின்படி, புரபஷனல் காதலி கணவனோடு அவனது படுக்கை யறையில் காணப்படுவாள். அவ்விருவரும் அங்கிருப் பதை நண்பனோடு, அல்லது சினேகிதியோடு, வரும் மனைவி பார்த்து விடுவாள். உடனே விவாக ரத்து மனுச் செய்தல் தான்.மனைவி புரபஷனல் காதலனோடு படுக்கையறையில் இருப்பதைக் காண்கிற கணவன் விவாக ரத்து கோரிப் போக வேண்டியது தானே! இந்த ரீதியில் நாடகமாகி விட்டது. விவாக ரத்துவிவகாரங்கள்.