பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

யிருப்பின் மாமியார் மாமனார்கள் அவளை வேலைக்காரி

போலவும், தங்களைவிட அந்தஸ்து குறைந்தவளாகவும்,அதனால் தாங்கள் கூறுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டு

சொன்ன அலுவல்களை யெல்லாம் செய்ய வேண்டியவள் என்றும் கருதுகிறார்கள். இச் சூழ்நிலையில் சிக்குகிற

பெண்ணுக்கு கணவனைத் தவிர கதி யார் ? அவன்

தன்னம்பிக்கையும் சுய பலமும் அற்ற அப்பாவியாக இருந்தால் அவள் பாடு ஐயோ பாவம் தான். இந்நிலையிலும்

தாம்பத்ய வாழ்விலே பிணக்கு விளைகிறது.

கல்யாணமானவர்களின் இன்ப வாழ்வுக்கு உற வினர்கள் உதவி செய்வதும் உண்டு. இடையூறு விளைவிப் பவர்களாக விளங்குவது முண்டு. மக்களின் மனப் பண்பும் அறிவு நிலையும் மாறி வளராத வரையில், நல் வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்குத் தொல்லைகள் இருந்தே தீரும். சமுதாய அமைப்பு முறையில் மாறு தல் பிறவாத வரை, பொருளாதார பேதங்களும் அவை காரணமாகப் பிறக்கிற குறைகளும் இராமல் போகா. வாழ்விலே நல் மணமும் இன்பமும் பயனும் பெற அலாவு கிறவர்கள் பேராசை கொண்டு தனக்கு மீறிய பெரிய இடங்களைப் பிடிக்க அலைந்தால், அதனால் வருகிற தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டியது தான் வாழ்க்கையில் மனம் பிணங்கா நல்ல தம்பதிகளாக வாழ விரும்புகிறவர்கள் ஒத்த குணமும், ஒத்த நிலைமைகளும்

உடையவர்களாக அமைதல் வேண்டும்.

காதல், அன்பின் பெருக்கு என்று கூறி ஜோடி சேர்ந்தால் பரஸ்பரம் மற்றவரின் பொருளாதார உயர்வு தாழ்வுகளை பெரிது படுத்தக் கூடாது. இவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு, கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ ஆட்டி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் பிணக்கிலும் பேத புத்தியிலும் தான்

கொண்டு சேர்க்கும்.