பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15

சமாளிக்க தாங்களாகவும் பெரியவர்கள் துணையுடனும் முயற்சிப்பது நல்லது.

சில சமயங்க ளில், கணவனும் மனைவியும் தனியாக குடும்பம் நடத்தும் போது இப்படி நிகழ்வது உண்டு. அதற்குக் காரணங்கள் இருக்கலாம். நெருக்கம் அதிகமா வது கூட-பழகிய பால் என்கிற தன்மையில்இருக்கலாம். இதற்கு இருவருக்கும் பொது மேற்பார்வை பார்க்க ஒரு அத்தையோ, அம்மாளோ

வீட்டிலே உலவிக் கொண்டிருந்தால் மனப் புழுக்கம் மாறலாம் . இதுபோன்ற சமயங்களில் தான் இருவரின் பொதுவான அன்புக்கும் கொஞ்சுதலுக்கும் இலக்காகிற குழந்தை வேண்டும் என்ற தேவை தம்பதிகளிடையே அதிகரிக்கிறது.


விவாக ரத்து உரிமையை அவசியம் பிரயோகிக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.

கணவனோ மனைவியோ தீராத கொடிய வியாதி யினால் - தொத்து நோயால் - பீடிக்கப்பட்டிருந்தால், குடும்ப வாழ்விலே இன்பமா உண்டாகும் ? இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் களங்கமுடையனவாகத் தான் திகழும்.

குஷ்டரோகமோ வேறு பயங்கர வியாதியோ இருப்பதை மறைத்து, பணம்-அந்தஸ்து-படாடோபம் முதலிய வெளிச்சங்களால் மயக்கி நல்ல பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கணவனுடன் பெண் என்ன சுகத்தை அடைந்துவிட முடியும்?

பணத்தை பக்க பலமாகக் கொண்டு அலிக்குக் கூட அழகியைக் கட்டி வைத்து விடுகிறார்கள் இன்றைய சமுதாயத்திலே,