பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

குறை கண்டு கோளாறை நீக்கத் துணை புரியும் நிபுணர்கள் அதிகம் தேவை காட்டுக்கு நல்லது செய்ய துறை தோறும் தேவையான திருத்தம் வகுத்து வழிகாட்டுவதற்குத் தகுந்த உளப் பரிசோதனைச் சிந்தனையாளர்கள் எங்கும் வேண்டும் எனும் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஏன் ? விவாகரத்துக்களைப் போற்றி வளர்க்கிற அமெரிக்காவில் கூட விவாகரத்தைக் கண்டித்துக் கதைகள், கட்டுரைகள் எழுதுவது அதிகரிக்கக் காரணம் என்ன ?

நாகரிகத் தீவிரம், பெண்ணுரிமை மோகம் முதலியவற்றின் பெயரால் வளர்ந்து வரும் விவாகரத்து உண்மையில் கெளரவமான விபசாரம் எனும் நிலைமையை எட்டி விட்டது அங்கே.

இன்றைக்குக் கல்யாணம்....நாளைக்கு விவாகரத்து. நாளை மறுநாள் வேறொரு கல்யாணம்...அடுத்த நாள் ரத்து....உடனேயே விவாகம் என்ற தலைபோகிற வேகத்திலே விவாகத்தையும் ரத்தையும் நடத்தித் தீர்ப்பது அமெரிக்கத்தனம்!

புருஷன் தூங்கும்போது அதிகமாகக் குறட்டை விடுகிறான்-அதனால் வேண்டும் விவாகரத்து. அவன் அதிகம் சினிமாப் பார்க்கிறான்...இல்லை, ஊர் சுத்து கிறான்?...சரி, பண்ணு விவாகரத்து ....அவன் நல்ல டிரஸ் செய்ய வில்லையா ? ... போ, விவாகரத்து 1. தான் கேட்டதை வாங்கித் தரவில்லை. ஆகவே, ரத்து.

இப்படித் தும்மினாலும் தூங்கினாலும், குறட்டை விட்டாலும் கோளாறு சொன்னலும், கோபமாகப் பேசினாலும் பேசாவிட்டாலும் - எதற்கெடுத்தாலும் விவாகரத்து தான். இது அமெரிக்கத்தனத்தில் அதிதீவிரமான ஹாலிவுட் மோஸ்தர்.