பக்கம்:விஷக்கோப்பை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

97


சி. பி. சிற்றரசு 97 பக்கத்தில் ஒரு திறந்த வெளியில் கூடுவோம், சிறைச் சாலைக் கதவுகள் திறந்தவுடன் உள்ளே செல்வோம். முதல் நாள் கிரேக்கத்திலிருந்து கப்பல் திரும்பி விட்டதென்ற செய்தியை அறிந்தோமாகையால் அன்று அதிகாலையிலேயே போனேம். நாங்கள் சிறைச்சாலையருகில் போனதும் காவலாளி வந்து, கொஞ்சம் பொறுங்கள். அதிகாரிகள் வந்து சாக்ர டீசுடைய கால் விலங்குகளைக் கழட்டிவிட்டு அவருக்கு இன்று விஷம் கொடுக்க வேண்டுமென்று உத்திரவு பிறப்பித்துக் கொண்டிருக்கின்ருர்கள். அவர்கள் போனதும் நீங்கள் வரலாம் என்று சொல்லிவிட்டுப் போளுன். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து எங்களை உள்ளே விட்டான். அப்போதுதான் விலங்கும் சங்கிலியும் க ழ ற் றப் பட் டி ரு ந் தன. சாக்ரடீஸ் மனைவி சாந்தியே குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். எங்களைக் கண்டதும், சகோதரர்களே ! இன்றுதான் கடைசி முறையாக உமது நண்பரிடம் பேசப் போகிறீர்கள் என்று கண்ணிர் விட்டுக் கதறி அழத் தொடங்கிளுள். கிரீடோ! இவளை வீட்டுக்கு யார் அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று சாக்ரடீஸ் சொன்னதும், கி ரீ டோ வி ன் ஆட்கள் சிலர் சாந்திபேவை வீட்டுக்கழைத்துப் போளுர் கள். அவளும் விம்மி விம்மி மார்பில் அடித்தபடி வீட்டுக்குச் சென்ருள். சாக்ரடீஸ் தம் படுக்கையில் உட்கார்ந்தபடி கால் களை மெதுவாகத் தடவி விட்டுக்கொண்டே நண்பர் வி-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/102&oldid=1331485" இலிருந்து மீள்விக்கப்பட்டது