பக்கம்:விஷக்கோப்பை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

விஷக்கோப்பை


98 விஷக்கோப்பை

களே! இந்த வேடிக்கையைப் பாருங்கள். இன்பமும் துன்பமும் ஒன்ருய்ச் சேர்ந்திருக்க முடியாதாயினும், அவைகள் ஒன்றன்பின் ஒன் ரு க த் தப்பாமல் செய்திருக்கின்ருன் ஆண்டவன். இவ்வளவு நாள் இந்தக் கால்விலங்கு நோயைத் தந்து வந்தது. இப் போது அது எடுக்கப்பட்டு விட்டதால் எவ்வளவு சுகமாயிருக்கிறது தெரியுமா என்று கால்களை வருடிக் கொண்டேயிருந்தார். நண்பர்கள் : ஐயோ உயிர் வி ட த் தயாராய் விட்டீர்களே! - சாக்ர : ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் இந்த உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால், அவனே வலிய சாவைத் தேடிக்கொள்ள மாட்டான். அது தவறு. நண்பர்கள் : ஏன் அது மாத்திரம் தவருகும். சாக்ர : உடலானது கடவுள் நமக்குத்தந்த ஒரு சிறைச்சாலை. அதிலிருந்து நாமாகத் தப்பிப் போகக் கூடாது. அவரே விடுதலை செய்ய வேண்டும் என்று சில மேதைகள் சொல்லுவார்கள். இதன் பொருள் விளங்குவது கடினமாயிருக்கலாம். ஏனென்ருல், நாமனைவரும் ஆண்டவனுடைய பாதுகாப்பிலிருக் கிருேம். நாமனைவரும் அவருடைய .ெ சாத் து. நம்மை நாமே வதை செய்து கொள்ள நமக்கு உரிமை கிடையாது. ஆண்டவன் நமக்கு விடுதலை கொடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/103&oldid=1331486" இலிருந்து மீள்விக்கப்பட்டது