பக்கம்:விஷக்கோப்பை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

101


சி. பி. சிற்றரசு ff) { தையே எடுத்துக் கொள்வோம். என்னைத் தண்டிப் பதற்குமுன் நாம் இந்தக் கருத்துக் கொண்டிருந்தது சரிதான ? அப்போது சரி என்று பட்ட வாதம் இப்போது வெறும் பொய் வாதம் ஆகிவிட்டதா ? குழந்தையின் பிதற்றலாகி விட்டதா என்ன, இதைத் தான் உன்னேடு சேர்ந்து கவனிக்க எண்ணுகிறேன் கிரீடோ, கிரிடோ : சரி நான் உங்களை மறுத்துப் பேச வில்லை. ஆளுல், ஒன்று கேட்கிறேன் சாக்ரடீஸ். எங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது நேருமே என்று தானே யோசிக்கிறீர்கள். நீங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டால் வேவுக்காரர்கள் நாங்கள் உங்களைத் திருட்டுத்தனமாக மீட்டு விட்ட தற்காக எங்களைச் சிக்கலில் மாட்டிவிடுவார்கள். எங்கள் சொத்து முழுவதையுமோ, பெரும்பகுதி யையோ இதல்ை நாங்கள் இழக்க நேருமோ, இன்னும் ஏதாவது பேராபத்து நேருமோ என்று தானே பயப்படுகிறீர்கள். எங்களைப் பற்றி அப்படி எ ந் த வி த மா ன ஐயமும் கொள்ளவேண்டாம். உங்களைக் காப்பாற்ற வேண்டி நாங்கள் துணிந்து நிற்க வேண்டியதுதான். இன்னும் பேராபத்து இருந்தாலும் சரி நாங்கள் துணிந்து விட்டோம். ஆகவே, நாங்கள் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று கடைசி முறையாகக் கெஞ்சிப் பார்த்தான். எனினும் பயனில்லை. சாக்ர - கிரீடோ! நீங்கள் நாளை இறந்துவிடப் போவதில்லை. அந்த மாதிரி நடக்கும் என்று யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/106&oldid=1331489" இலிருந்து மீள்விக்கப்பட்டது