பக்கம்:விஷக்கோப்பை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

103


சி. பி. சிற்றரசு 103 பாராட்டுவதையும், குறைகூறுவதையும் கவனித்துக் கொண்டிருப்பதா அல்லது தன் ஆசிரியரோ உடற் பயிற்சி அளிப்பவரோ கொடுக்கும் பயிற்சியைக் கவனிப்பதா. கிரிடோ : அந்த ஒரு ஆசிரியர் கொடுக்கும் கருத்தைத்தான் கவனிக்க வேண்டும். சாக் அந்த ஒரு மனிதன் கண்டிப்பான் என்று அஞ்சியோ அவன் பாராட்டுவதை விரும்பியோ தான் இருக்க வேண்டும். எல்லோரும் சொல்வதைக் கவனிக்கக் கூடாது அப்படித்தானே. கிரிடோ : ஆம். அதுவ்ே தான். சாக்ர மற்ற எல்லோருடைய கருத்தின்படி நடப்பதைவிட் தன் ஆசிரியருக்கு எது நல்லது என்று படுகிறதோ அதன்படி செய்து, பயிற்சி பெற்று, ஆசிரியரைப்போல, தக்கதை உண்டும், பருகியும் வாழ வேண்டும். ஏனென்ருல், அந்த ஆசிரியர்தானே மாணவனுக்கு எது தேவை என்று உணர்ந்தவர் இல்லையா ? கிரிடோ : ஆமாம். சாக்ர : ஆ! உண்மைக்கு வெகு சமீபத்தில் வந்து விட்டீர்கள். நானும் சாவின் சமீபத்துக்கு வந்து விட்டேன். நான் யார் சொல்லி இந்த முடிவுக்கு வந்தேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/108&oldid=1331491" இலிருந்து மீள்விக்கப்பட்டது