பக்கம்:விஷக்கோப்பை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

விஷக்கோப்பை


104 விஷக்கோப்பை

கிரிடோ : யார் சொல்லி என்று சரியாகத் தெரிய வில்லை. ஆனல், அந்த மூவர் சுமத்திய பழிகள் சொல்லி என்று நினைக்கிறேன். - சாக்ர : அங்கேதான் தவறி விட்டீர்கள், மூவர் குற்றம் சுமத்தினர்கள். உண்மைதான். அவர்கள் சுமத்திய குற்றத்தை உடனே நம்பி எனக்கு நீதி மன்றம் மரண தண்டனை அளித்ததா? இல்லை, என்னை யும் அழைத்து விசாரித்தது. அந்த உரிமை எனக் கிருந்தது என்பதால், நானும் என்னலான குற்ற மறுப்பு வாதத்தைப் புரிந்தேன். ஏன், நான் இந்த நாட்டில் பிறந்த குடிமகன் என்ற உரிமையால், சரி என் குற்ற மறுப்பு முடிந்த உடனே மரண தண்டனை யளித்துவிட்டதா ? இல்லை. ஏன்? நீதி மன்றத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொருவருடைய கருத்தைக் கேட்க வேண்டுமே. அதனல் என்ன செய்தார்கள். என் உயி ரைத் தாக்கல் செய்து வாக்குப் பதிவு நடத்தினர்கள் அதில் கிடைத்த தீர்ப்பென்ன? நான் சாக வேண்டு மென்பது. இவ்வளவு சடங்குகளையும் இயக்கியது எது ? சட்டங்கள். அந்த சட்டங்களுக்கு இவ்வளவும் செய்ய அதிகாரம் இருந்தது. சரி, அந்தச் சட்டங்களை யார் செய்தார்கள்? நமது முன்னேர்கள். அவர்கள் வழிவந்த நாம் அவர்கள் செய்த சட்டங்களுக்கும் அடங்கி நடக்க வேண்டியதுதானே. இந்த விதி ஏதென்சில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தியாக வேண்டுமல்லவா ? அப்படி இருக்கும் போது எனக்கு மட்டிலும் பொருந்தாது என்று வாதாடுவது எப்படி நியாயமாகும். ஆகவே, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/109&oldid=1331492" இலிருந்து மீள்விக்கப்பட்டது