பக்கம்:விஷக்கோப்பை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

விஷக்கோப்பை


1 12 விஷக்கோப்பை

நீதிமன்றத்தில் எனக்கு அவர் பொறுப்புத் (ஜாமீன்) தொகை கட்டுவதாகக்கூறி நான் எங்கும் ஒடிவிடமாட்டேன் எ ன் று உறு தி கூறினர். இப்போது நீங்கள் அவருக்குப்பொறுப்பு கொடுங்கள், நான் இருக்கமாட்டேன், போய்விடுவேன் என்று உறுதி கூறுங்கள். (என்று சொல்லி நகைத்தார்) "இப்படி நீங்கள் அவருக்கு உறுதி தந்தால்தான் என் பிரேதத்தைத் தீயில் போட்டுக் கொளுத்து வதைப் பார்த்தோ-மண்ணில் போட்டுப் புதைப்ப தைப் பார்த்தோ அழாமல் இருப்பார். சாக்ரடீஸை மயானத்துக்கெடுத்துச் செல்கிருேம். சிதையின்மேல் வைக்கிருேம், அல்லது மண்ணில் புதைக்கிருேம் என்று அவர் சொல்லாமலிருப்பார். என் அருமை நண்பனே! கிரிடோ இவ்விதம் பேசுவதெல்லாம் தவறு, தவருண பேச்சுக்களைப் பயன்படுத்தினல் பேச்சு மாத்திரம் கெட்டுப்போவதில்லை. நமது அறிவும் கெட்டுப்போகும். அதனால் துன்பம் உண் டாகும். தைரியமாக இருங்கள். அழாதீர். நீர் என் உடலைப் புதைக்கிறேன் என்று சொல்வாதீர். உம் எண்ணப்படி நீர் எவ்விதம் என் உடலைத் தகனம் செய்ய எண்ணுகிறீரோ அவ்விதமே என் உடலே அடக்கம் செய்யுங்கள். (என்று சொல்லி விட்டு கிரீடோவுடன் குளிக்கப் போனர்.) அந்த நேரம், நம்மைப் பெற்ற தந்தையை இழந்து, நாமெல்லாம் திக்கற்றக் குழந்தைகளாகப் போவதுபோல் தோன்றிற்று. குளித்து வெளி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/117&oldid=1331500" இலிருந்து மீள்விக்கப்பட்டது