பக்கம்:விஷக்கோப்பை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

115


சி. பி. சிற்றரசு 115 நாளில் நன்ருக சாப்பிட்டும் மது அருந்தியும் மகிழ்ச்சி யாக அந்தக் கடைசி நேரத்தைக் கழித்துவிட்டு வெகு நேரம் பொறுத்து வி ஷ த் ைத க் குடிப்பார்கள். அதற்குள் நீங்கள் அவசரப்படுகிறீர்கள். நீங்களும் அப்படிச் செய்யலாமே ? உங்களுக்கு அந்த உரிமை இல்லையா ? சாக்ர ; நிச்சயமாக உண்டு. ஒருவன் வாழ்வில் எவ்வளவு துயரடைந்தாலும் இறுதியில் மரண வாயி லுக்கு முன்னே கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என்பது நல்லதுதான். ஆனால், நான் என் வாழ்வில் எங்கே துயரடைந்தேன்? எனக்கேன் இந்த மகிழ்ச்சி அப்படியே நான் செய்வதாக ஒப்புக்கொண்டால், அதன் பொருள் என்ன ? நானும் மற்றவர்களைப் போல் இன்னும் மனைவி ம க் க ள் ேம ல் ஆசை வைத்திருக்கின்றேன். ஆசாபாசங்களை என்னல் விட முடியவில்லை. பந்தபாசத்தை மறக்க முடியவில்லை என்ருகிவிடும் அல்லவா ? மற்றவர்கள் அப்படி செய்வது சரிதான். அவர்கள் அந்த சுகங்களை மதித்து எப்போதும் உயிருடன் இருக்க விரும்புவார்கள். அதனால் தாமதமாக விஷத்தைக் குடிப்பார்கள். நான் அப்படிச் செய்யலாமா? உயிரைவிட மனம் வராமல் இன்னும் வாழ நினைக்கும் ஒரு சில நிமிடங் கள் என் வாழ் நாளை நீட்ட நினைப்பதாகாது. அதை நினைக்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னை அப்படிச் செய்ய தயவு செய்து தூண்டாதீர்கள் என்ருன். கிரிடோ கண் காட்டியதும் அருகிலிருந்த நண்பர்களெல்லாம் வெளியே சென்று விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/120&oldid=1331503" இலிருந்து மீள்விக்கப்பட்டது