பக்கம்:விஷக்கோப்பை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

விஷக்கோப்பை


I 16 விஷக்கோப்பை

ஒரு அதிகாரி விஷக் கோப்பையுடன் உள்ளே வந்தான். ஆம்! அது எம்லாக் (Hemlock) என்ற கொடிய விஷம். நண்பனே இதைக் கொடுக்கும் முறைகளை எல்லாம் நீர் அறிந்தவனுயிற்றே நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுக. இதை நீர் குடித்துவிட வேண்டும். அதன்பின் கால் மரக்கும்போல் தோன்றுகின்ற வரையிலும் நடந்து கொண்டிருக்க வேண்டும். பிற கு நீர் படுத்துக் கொள்ளலாம். விஷம் தன் வேலையைச் செய்யும் என்று சொல் லி விஷக் கோப்பையைச் சாக்ரடீசிடம் கொடுத்துவிட்டு நின்ருன். அவர் அதைக் கையசைக்காமல் முகம் மாருமல் தம் கையில் வாங்கிக்கொண்டு அதிகாரியை உற்றுப் பார்த்து அப்பா ! இந்த விஷம் இவ்வளவுதான அல்லது நம் முடைய தேவைக்கேற்றபடி செய்துக் கொள்ளலாமா? அதிகாரி : ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் ? சாக்ர : இதில் ஒரு துளி எடுத்து என் தாயகத் தின்மேல் தெளிக்கலாமா என்று தெரிந்து கொள் வதற்காகக் கேட்டேன். அதிகாரி : பெரியவரே ! மன்னிக்க வேண்டும். எந்த அளவு கலக்கினல் உங்கள் உயிர் போகுமோ அந்த அளவுதான் கலக்கி இருக்கின்ருர்கள். ஒரு துளி எடுத்து விடுவதன் மூலம் உங்கள் உயிர் பிரியாமல் போகலாம். அப்படி நடந்து விடுமானல் அதிகாரிகள் கண்டுபிடித்து என்னைத் தண்டிப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/121&oldid=1331504" இலிருந்து மீள்விக்கப்பட்டது