பக்கம்:விஷக்கோப்பை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

119


சி. பி. சிற்றரசு 119 ஆகட்டும். அது நிறைவேற்றப்பட்டுவிடும் என்று சொல்லிவிட்டு இன்னும் ஏதாவது தாங்கள் இட வேண்டிய கட்டளை உண்டா என்று கேட்டான் கிரிடோ. பதில் இல்லை. பேச்சு அடங்கி விட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் உடல் ஒரு அசைவுற்றது. அதிகாரி துணியை எடுத்துப் பார்த்ததில் உயிர் போய் சாக்ரடீஸ் பிணமாகக் கிடந்தார். வாயையும், கண்ணேயும் கிரிடோ மூடினர். இதுதான் முடிவு. ' உலகில் நாம் கண்ட ஞானிகளில் தலைசிறந்த வரும், நல்வினையும் நற்பண்பும் கொண்டிருந்தவரு மான நமது நண்பர் உயிர் நீத்தார் ’ எ ன் ற துக்கத்தோடு பிரிந்தனர். சவ ஊர்வலம் அவனைக் கல்லறைக்கு அழைத்துச் சென்ற வாத்திய கோஷங்கள் வீடு திரும்புவதற்கு முன்னால், அவன் பிரேதத்தின்மேல் போட்ட மாலேகள் வாடு வதற்கு முன்னால், அவன் பிரிவுக்காற்ருது வருந்தி அழுதவர் கண்ணிர்த் திவலைகள் உப்புக்கோடுகளாக மாறுவதற்கு முன்னல், அவனுடைய சிதையிலிட்ட தீ சாம்பலாக மாறுவதற்கு முன்னால், காலமெனும் பெறுந் தீ தன் சென்னக்குகளே ஏதென்ஸ் நகரத்தின் மேல் நீட்டத் தொடங்கி விட்டது, இந் த ப் பேரறிஞனைப் பின்பற்றிய இளைஞர்கள் சிலர் தற் கொலை செய்துக் கொண்டனர். என்ன நேருமோ என்று நடுங்கிய அந்த மூவர், (மெலிடஸ், அனிடஸ், லைகோன்) தற்காப்பைப் பலப்படுத்திக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/124&oldid=1331507" இலிருந்து மீள்விக்கப்பட்டது