பக்கம்:விஷக்கோப்பை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

விஷக்கோப்பை


120 விஷக்கோப்பை

எங்கும் கலகம் சாக்ரடீசின் சாவுக்காக வாக்களித்தவர் யார் யார் என சந்தேகப் பட்டார்களோ அவர்களே இளைஞர்கள் வெறி கொண்டு தாக்கினர். ஊர் அமைதி கொள்வதென்பது மிகக் கடினமாய் விட்டது. நிலைமையை எப்படிச் சமாளிப்பதென்பதே சர்க்கா ருக்குப் பெருந்தொல்லையாகி விட்டது. ஒரு கூட்டம் நீதிமன்றத்தை நொறுக்கக் கிளம்பி விட்டது. மற்குெரு கூட்டம் சிறைச்சாலைய்ைச் சிதைக்க ஒடுகிறது. எங்கும் சீற்றம் கொண்ட மக்கள் வெள்ளம். இனி அமைதி எப்போது என்ற நிலைக்கு வந்தது ஏதென்ஸ். எத்தனையோ போர்களிலே ஈடு பட்டதுதான் ஏதென்ஸ். பிணக் குவியல்களைக் கண்டு க ல ங் கா தி ரு ந் த து தா ன் ஏதென்ஸ். கோட்டைகள் சரிந்ததை, கொத்தளங்கள் அடியற்ற மரம்போல் சாய்ந்ததைக் கண்டதுதான் ஏதென்ஸ். போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் உற்ருர் உறவினர் மட்டுமே அழுதனர் அன்று. இ ன் று அனைவருமே அழுது தீர்த்தனர். சாக்ரடீஸ் சிதைக் கிட்ட தீ மக்கள் கண்ணிரை உலர்த்திவிட்டது. சாவெனும் பெருந்தீங்கு சாகரத்தின் புயலோ என்று அஞ்சிய மக்கள் முன்னல், சாவே வா!' எனச் சாவெனும் சாகரத்தைத் தாண்டியவன் சாக்ரடீஸ், கால எல்லையின் கடைசி கோடு எது என்று குழம்பி யிருந்த மக்கள் முன்னல் சாவின் கடைசி எல்லை இது வெனக்காட்ட விஷக்கோப்பையைக் கையிலேந்திய வன் சாக்ரடீஸ், பிறந்தனர், இறந்தனர், புழுதி மேடாயினர் பலர். வாழ்க்கை இதுவெனக் காட்டிய வன் சாக்ரடீஸ். அதன்படி வாழ்ந்து காட்டியவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/125&oldid=1331508" இலிருந்து மீள்விக்கப்பட்டது