பக்கம்:விஷக்கோப்பை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

121


இறப்பென்பது இதுவென நாட்டியவன் சாக்ரடீஸ். “செல்வம் அனைவரையும் உயர்த்தி விடுவதில்லை, ஆளுல் சீலம் அனைவரையும் உயர்த்தும். தேடிக் கிடைக்கும் செல்வத்தைவிட, தேடியும் கிடைக்காத சீலத்தைத் தேடுங்கள்.” என்றழைத்தவன் சாக்ரடீஸ். கல்லறையில் கல்லறை முழுதும் மக்கள் கடலெனத் திரண்ட னர். பிளேட்டோ, கிரிடோ, நிம்மியாஸ் முதலான பெரியோர்கள் கல்லறையின் அருகில் நிற்கிருர்கள். கிரிடோவுக்குப் பேச நாவெழவில்லை. து க் க ம் நெஞ்சையடைக்கிறது. எங்கும் அமைதி. சோகக்களை. பிளேட்டோ பேசுகிருன் எனது ஏதென்ஸ் நாட்டு அருமை நண்பர்களே. அறிஞனே எறித்த கைகளோடு நிற்கிருேம். ஒரு நல்லவரை வீண்பழி சுமத்திக் கொன்றுவிட்ட குறை மதி படைத்த நாடு ஏதென்ஸ் என்ற சாபக்கேட்டை நம் தாயகம் பெற்றுவிட்டது. இனி அந்தச் சாபக் கேட்டைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையே நமது அறிவுக்கெட்டியவரையில் புலப்படவில்லை. நாம் சாவோம், சாகடிக்கப்பட மாட்டோம். என்ற துணிவில் யாருமே ஏதென்சில் வாழமாட்டார்கள் என்ற அறிவிப்பைத் தந்து சென்ற வனின் கல்லறை முன்னலே நிற்கின்ருேம், நேற் றிருந்தான், இன்று வெந்து நீரானன், நாளை யாரோ என்ற அச்சத்துக்கிடையிலே வாழுங்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/126&oldid=1331582" இலிருந்து மீள்விக்கப்பட்டது