பக்கம்:விஷக்கோப்பை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

விஷக்கோப்பை


8 விஷக்கோப்பை

தொழுது வரும் கடவுள்களை பொய்யென்று தூற்றித் தான் ஒரு புதுக் கடவுளே உண்டாக்குகிருன், இளைஞர்களைக் கெடுத்துவிடுகிருன்." என்ற குற்றஞ் சாட்டித் தன் குற்றச் சாட்டை மெலிடஸ் என்பவன் பின்வருமாறு படிக்கிருன் நீதிமன்றத்தில். குற்றச்சாட்டு "பித்தஸ்பேட்டையில் இருக்கும் மெலிடஸ் என்பவரின் மகன் (ம்ெலிடஸ்) என்பவன், அலோபேக் பேட்டையில் வசிக்கும், காலஞ்சென்ற சோப்ரோ னிஸ்கஸ் மகன் சாக்ரடீஸ் மீது பின்வருமாறு குற்றஞ் சாட்டுகின்றேன். - ஏதன்ஸ் நாட்டு மக்களும் அரசாங்கமும் எந்தக் கடவுளர்களைத் தொழுகிருர்களோ, அந்தக் கடவுளர் களைத் தொழுகிறதில்லை. அதற்குப் பதிலாக இவன், இதற்கு முன்பில்லாத புதிய கடவுள்களைப் புகுத்து கிருன். வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கின்ருன். சந்திரனே மண் என்றும் சூரியனைக் கல்லென்றும் சொல்லுகின்ருன். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிருன். சாக்ரடீஸ் மிகவும் தீயவன். கடவுளால் விவரிக்கப் படாத மறை பொருள்களைத் துருவியறிவது இவனுக்கு எப்போதும் பொழுதுபோக்காக உள்ளது. இவன் கெட்டதை நல்லதைப்போல் நாட்ட வல்லவன். நல்லதைக் கெட்டதைப்போல் நாட்ட வல்லவன். மற்றும், இளைஞர்களைத் தன் பேச்சின் வன்மையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/13&oldid=1331396" இலிருந்து மீள்விக்கப்பட்டது