பக்கம்:விஷக்கோப்பை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

9


கெடுத்து விடுகிருன். ஆதலின் மெலிடஸ் என்ற வாதி யாகிய நான் இவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தை வேண்டிக்கொள்ளு கிறேன். - இப்படிக்கு, மெ. மெலிடஸ், பித்தஸ் பேட்டை, ஏதன்ஸ். நீதிமன்றத்தில் இன்று குற்றவாளியாக நிறுத்தப் பட்டிருக்கிருேமே, என்பதற்காக அவன் கவலைப்பட வில்லை. காரணம், அவன் குற்றம் செய்யாததால். தன்னை ஒரு காலத்தில் நீதிமான் எனக் கெளரவித்த அதே நீதிமன்றத்தில், இவன் தன் உயிருக்காகப் போராடிக் கண்ணிர் மல்கிக் கால் நடுக்கத்தோடு நிற்கவில்லை. உண்மைக்காகப் போராடித் தன் உயிரையே அர்ப்பணித்தான். இவனுக்கு முன் டையகோரஸ் இதையே பேசி ன்ை. முக்கியமாகக் கடவுளர்களைப்பற்றிப் பேசினன். சிறப்பாக சில ஆபாசக் கருத்துக்களடங்கிய, அதாவது தாயையே தாரமாக்கிக் கொண்ட ஏரர்ஸ், தங்கையைத் தாரமாக்கிக் கொண்ட ஜூவெஸ் போன்ற கிரேக்கக் கடவுள்களைப் பற்றியும் பிற வற்றைப்பற்றியும் கருத்தில்லா பூசாரிகளும் மதத் தலைவர்களும் கட்டிவிட்ட பொய்க் கதைகளைப் போருக்கழைத்தான் டையகோரஸ். சிரித்தனர் சிலர்: .சீறினர் பலர். ஒளியில்லாத காலத்தில் வாழ்ந்த அந்த மக்களால், சிந்தைக்குச் செயல் கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/14&oldid=1331397" இலிருந்து மீள்விக்கப்பட்டது