பக்கம்:விஷக்கோப்பை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

15


சி. பி. சிற்றரசு 15 டையே சொல்ல ஆரம்பிக்கும்போது, இங்கே நீதிமான் களாக வீற்றிருக்கும் உங்களில் மிகப்பலர் சிறுபிள்ளை களாக இருந்தீர்கள். என்ருலும், அந்த ஒரு காரணத் திற்காகவே இந்தக் குற்றமற்றவனுக்கு நீதி வழங்கும் பெருமைக்குரிய மக்களாக வீற்றிருக்கும் உங்களை நான் அவமதிக்கமாட்டேன். நான் அப்படிச் செய் வேைைல், என் தாய் நாட்டின் சட்டத்தையும் நீதி யையும் அவமதித்தவளுவேன். என்மேல் சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு எனக்கு மரண தண்டனையே அளிப்பதாலுைம், என் குழந்தை களை இந்த நீதிமன்றத்தின் காலடியில் கிடத்தி நான் உயிர்ப் பிச்சை கேட்கப் போவதில்லை. நான் அப்படிச் செய்வேளுளுல் என் குழந்தைகளின் பரிதாப முகங் களைப் பார்த்து நீதியிலிருந்து நீங்கள் தவறி விடவும் கூடும். நீதியின் வல்லமையை என் குழந்தைகளின் கண்ணிரால் மறைக்க நான் எண்ணவில்லை. ஏனெனில், நான் தவறுடையவன அல்லவா என்று நிருபிக்கப் பட்டால், அதல்ை வரும் தண்டனை, அல்லது மன்னிப்பு ஆகியவைகளுக்கு நானே நேரடியான பொறுப்பாளி. ஆகவே, என்னல் காப்பாற்றப்படுகிற, அல்லது என் ரத்தபாசத்தில் கலந்த, அல்லது என் நன்மை தீமை களில் கவலை கொண்ட யாருமே கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஏன், என்மேல் குற்றம் சுமத்தியிருக்கிற எதிரிகளேகூட கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஏனென் ருல், பொய்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான் அடையப் போகும் தண்டனையைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று நாக்கில் நீர் ஊறிக்கொண்டிருக்கும் அவர்களை ஏன் என் துக்கத்தில் துணை சேர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/20&oldid=1331403" இலிருந்து மீள்விக்கப்பட்டது