பக்கம்:விஷக்கோப்பை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

17


சி. பி. சிற்றரசு - 17 ஒரு மனிதன் தான் அடைந்திருக்கும் வயோதிகத் துக்காக கவலைப்படக்கூடாது. பிறகு ஏன் எல்லா வயோதிகர்களும் ஏகமனதாகக் கவலைப்படுகின்ருர் கள்? வயோதிக காலத்தில் தான் இறந்துபோவது திண் ணம் என்ற எண்ணம் வந்துவிடுகின்றது. உடனே அச் சம் உண்டாகிறது. அதுவரை நினையாத எண்ணங்களை எல்லாம் அப்போது எண்ணத் தொடங்குகின்ருன். " இந்த உலகத்தில் கெட்ட காரியங்களைச் செய்கிற வர்கள், மறு உலகத்தில் தண்டனை அடைவார்கள் ” என்று சொல்லப்பட்ட வரலாறு அவன் ஒரு காலத்தில், அதாவது, இளமையில் கற்பிக்கப்பட்டிருக்கின்ருன், வயோதிகம் வந்த பிறகு அவைகளெல்லாம் உண்மை யாக இருக்குமோ என்று கவலைப்படுகிருன், வயோதி கத்தில்ை ஏற்பட்ட உடல் மெலிவினலோ, அல்லது மறு உலகத்துக்குச் சமீபத்தில் இருக்கிருேமே என்ற பயத்தி ஞலோ, தான் அடையப்போவதாக நினைத்துக்கொண் டிருக்கும் தண்டனைகள் தன் கண்முன் தாண்டவ மாடுகின்றன. " நான் யாருக்காவது ஏதாவது தீமைகள் செய்திருக்கின்றேன ” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்கிருன். தான் செய்த பல அநியாய காரியங்கள் அவன் நினைவுக்கு வருகின்றன. தூங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு குழந்தை பயத்தினல் எப்படித் திடீரென விழித்துக் கொள்ளுமோ, அதைப் போலவே அவன் தன் பழைய காரியங்களைப்பற்றி நினைத்துக்கொண்டு, அவைகளுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என பயப்படுகின்ருன். எவன் ஒருவன் தன் மனப்பூர்வமாக யாருக்கும் எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்று உணர்கின்ருனே,அவன் வயோதிக வி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/22&oldid=1331405" இலிருந்து மீள்விக்கப்பட்டது