பக்கம்:விஷக்கோப்பை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

விஷக்கோப்பை


20 விஷக்கோப்பை

கடவுள் நம்பிக்கையற்றவன் என்பது. இது எவ்வளவு மோசமான குற்றச்சாட்டு என்பதை ஏதன்ஸ் நகர நீதி மான்களே! நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள். தனக்கு விருப்பமான ஒன்றில் உள்ளத்தைச் செலுத்தி உண்மையைக் கண்டு பிடிக்க விரும்புகின்ற ஒருவனை நாத்திகன் எனக் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு மோச மான பழி என்பதை எண்ண என் மனம் வேதனைப் படுகிறது. கண் இருப்பதால் பார்க்கின்றேன், கால் இருப்பதால் நடக்கின்றேன். கைகள் இருப்பதால் வேலை செய்கின்றேன். காதுகள் இருப்பதால் கேட் கின்றேன். வாய் இருப்பதால் பேசுகின்றேன். அதே போல் உள்ளம் இருப்பதால் சிந்திக்கின்றேன்! இது எப்படித் தவருகும் என்று எனக்கே தெரியவில்லை. "மோசமான கருத்துக்களை அழகான காரணங்களால் நிலை நாட்டுகின்றேனம். இவ்வளவு கெட்டஎண்ணத்" தோடு இந்த நல்ல வாதங்களை எல்லாம் பொய்முலாம் பூசி வெளியுலகுக்குப் பரப்பிய அவர்களே மிக மிக அபாயமான மனிதர்கள் என அஞ்சுகின்றேன். வஞ்ச நெஞ்சத்தோடு என்னே வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகள் யாரையும், உங்கள் முன் நிறுத்தி நான் குறுக்கு விசாரணை செய்ய விரும்ப வில்லை. நான் அப்படிச் செய்ய விரும்பினால், எதிரி யோடு போராட முடியாத வீரன், எதிரியின் நிழ லோடு போராட விரும்புகின்ற கோழைக்கொப்பானவ. ளுவேன். ஏனெனில், என்னுடைய நியாயமான எதிரி கள் அநீதியும் அறவின்மையுந்தான். இவர்களெல்லாம் அவைகளின் நிழல்கள். மேலும் அவர்கள் யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/25&oldid=1331408" இலிருந்து மீள்விக்கப்பட்டது