பக்கம்:விஷக்கோப்பை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

21


சி. பி. சிற்றரசு 21 என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட் டார்கள். இதுவரை அவர்கள் சொல்லியதுமில்லை. வேண்டுமானுல் நண்பர் மெலிடஸ் அவர்களைச் சில -கேள்விகள் கேட்க விரும்புகிறேன்! குறுக்கு விசாரணை நீதிமான்களே!....உங்கள் கட்டாயத்துக்காகவும், நீதி மன்றத்தின் சம்பிரதாயத்திற்காகவும் சிறிது நேரம் மெலிடஸ் அவர்களைக் குறுக்கு விசாரணை நடத் துகிறேன். - சாக்ரடீஸ் : இங்கே வாருங்கள் மெலிடஸ்! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். வாலிபர்களை எப்படிச் சீர்திருத்த வேண்டும், யார் சீர்திருத்த வேண்டு மென்றுதானே நீங்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள்!. மெலிடஸ் : ஆமாம். சாக் : அப்படியானல், அந்த வாலிபர்களே யார் சீர்திருத்துகிரு.ர்கள் என்று நீதிபதிகளிடம் கூறுங்கள். . . - மெலி : சட்டங்கள். சாக் நண்பரே! நான் அதைக் கேட்கவில்லை. யார் அவர்களை சீர்திருத்துகிருர்கள். சட்டங்களா? மனிதர்களா? மெலி : இதே நீதிமான்கள். சாக் . இவர்கள்தான் வாலிபர்களுக்குப் போதித்து சீர்திருத்தினர்களா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/26&oldid=1331409" இலிருந்து மீள்விக்கப்பட்டது