பக்கம்:விஷக்கோப்பை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

விஷக்கோப்பை


24

விஷக்கோப்பை என்றுதான் ஆகிவிடும். அவன் ஹெக்டரைக் கொல்லத் துடித்தபோது அவனுடைய தெய்வத் தாய் தெடிஸ்தேவி, ' உன் தோழனை பட்ராக் ளசை ஹெக்டர் கொன்ருன் என்பதற்காக இப்படி பழி வாங்கினல் நீயும் சாக நேரும். ஹெக்டர் மடிந்ததும் விதி உன்னே இதே மாதிரி பழி வாங்கக் காத்திருக்கிறது. ” என்ற முறையில் எச்சரித்திருக்கிருள். எவ்வளவு எச்சரித்தும் தெடிஸ்தேவியின் மகன் அகிப்பஸ் ஆபத்தையும் சாவையும் பொருட்படுத்தவில்லை, அவற்றுக்கு அஞ்சவுமில்லை. மானம் இழந்து வாழ்கிருேமே, நம் நண்பன் மடிந்ததற்குப் பழி வாங்காமல் இருக்கிருேமே எ ன் று தா ன் அஞ்சினன். “ இப்போதே நான் சாகத் தயார்தான். இப்படி இங்கே பகைவர்கள் குத்திட்டியுடன் நிற்கும் கப்பல்களுக்கு அருகில் போய்ச் செத்தாலும் சாகிறேன். ” என்கிருன். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வதென்ன? அவமானம் நேருமே என்று கவலைப்பட வேண்டுமே.தவிர, சாவைப் பற்றியோ மற்றதைப்பற்றியோ கவலைப்படக் கூடாது. மூன்ருவது குற்றச்சாட்டு:-நான் இளைஞர்களைக் கெடுத்துவிட்டேன் என்பது. நான் எந்த வகையில் அவர்களைக் கெடுத்துவிட்டேன் என்பது எனக்கே புரிய வில்லை. ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, முப்பது ஆண்டுகளாக நான் சொல்லிக்கொண்டு வந்திருக்கின் றேன். ஒருவனுக்கு, பிறர் சொல்வதைப் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/29&oldid=1331412" இலிருந்து மீள்விக்கப்பட்டது