பக்கம்:விஷக்கோப்பை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

விஷக்கோப்பை


30 விஷக்கோப்பை

எந்த நண்பராவது என்னேப் பார்த்து, “ இப்படி வம்புகளை வளர்த்துக் கொண்டு சாகத்துணிகின்ருயே, இது உனக்கு வெட்கமாக இல்லையா ? என்று கேட் டால், நான் அமைதியாகவும் அன்பாகவும் இப்படித் தான் பதில் சொல்வேன் :- நண்பரே! என்னைப் போல பொது விசாரணையில் ஈடுபடுகிற ஒருவன், தன் வாதம் சரி என்பதற்காகவோ தவறென்பதற். காகவோ சாகப் பயப்படுவதைவிட கேவலமும், அவ மானமும் வேருென்றுமில்லை. பொது விவகாரங்களில் ஈடுபடுகிறவன்தான் செத்துவிடுவான் மற்றவர்களெல் லாம் சாகாமலே இருப்பவர்கள் என்று நினைக் கின்றீரே, அந்த எண்ணத்தைத் தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்பேன். சொல்லைக் காட்டிலும் செயலுக்கு வன்மை அதிகம் என்பதை நான் உணர் வேன். ஆகவேதான் உயிருக்காக நான் அஞ்சுவதில்லை. ஆனல் அநீதிக்கே நான் மிக மிக அஞ்சுகிறேன். மனி தர்களிடம் தர்க்கிக்கிறேன், அவர்கள் நல்வழிப்பட வேண்டுமென்பதற்காக, அவர்கள் வெறும் சிரம் வைத்த பொம்மைகளாக இல்லாமல் சிந்திக்கத் தகுந்தவர்களாக வேண்டும் என்பதற்காக. ஆனல் நான் மனிதர்களிடம் தர்க்கிப்பதற்கு முன்பாக, என்னே நானே தர்க்கித்துக்கொண்டேன். ஏன் பிறந்தேன். எதற்காக வளர்ந்தேன். என்னல் பிறர்க்கு என்ன பயன், நாட்டால் எனக்கென்ன பயன். ஒரு நாட்டுக்கு ஒரு மனிதன் எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியும். அதனையும் நாட்டுப் பற்றையும் சேர்த்து வைப்பது எந்த சக்தி. படித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/35&oldid=1331418" இலிருந்து மீள்விக்கப்பட்டது