பக்கம்:விஷக்கோப்பை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

37


சி. பி. சிற்றரசு 37 கொள்ளும்படி வற்புறுத்தவில்லை. குரு சீடன் என்ற முறையில் நான் யாரிடமும் வாதாடவுமில்லை. வின விடை என்ற முறையிலே வாதாடினேன். என் வாதங்களைச் சரியென ஒப்புக்கொண்டவர்கள் நண்பர் களானர்கள். ஒப்புக்கொள்ளாதவ்ர்கள் பகைவர் களாய் என்னை இந்தக் குற்றக் கூண்டிலே நிறுத்தி யிருக்கிருர்கள். - குற்றவாளியா நான்? அந்த வகையில் நகர மாந்தர்கள் நம்பாத ஒன்றை நான் நம்பினேன் என்பதால் குற்றவாளியா? அவர்கள் நம்புகிற ஒன்றை நான் நம்பாததால் குற்ற வாளியா? இருட்டில் நடக்கும் இளைஞர்களுக்கு ஒவ் வோர் விடிையும் உண்மையான பாதையைக் காட்டிய தால் நான் குற்றவாளியா? ஆண்டவன் பேரால் பல அக்ரமங்களைச் செய்துகொண்டு அரசாங்கத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த பல கபட வேட தாரிகளை அதட்டி நிறுத்தி அறிவை நம்பி நல்வழி நடக்கத் துாண்டியதால் நான் குற்றவாளியா? பணக் காரர்களை ஏழையாகிய நான் எதிர்த்ததால் குற்ற வாளியா? நான் பல கடவுளர்களை நம்பாததால், ஒரு கடவுளை நம்புவதால் குற்றவாளியா?...ஏனெனில் என் எதிரிகள் சொல்லும் கடவுளர்களை நான் நம்புவ தில்லை. அவர்களும் நான் சொல்லும் கடவுளை நம்புவ தில்லை. ஆனல், அவர்கள் சொல்வதை இந்த நீதி மன்றம் உட்பட நகர மக்கள் அனைவரும் நம்பும் அள வுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தவர்களை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/42&oldid=1331425" இலிருந்து மீள்விக்கப்பட்டது