பக்கம்:விஷக்கோப்பை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

39


சி. பி. சிற்றரசு 39 களில் மற்றவர்களுக்கு அறிவில்லை என்று நிரூபித்து வந்தேனே, அந்த அறிவை நான் பெற்று விட்டதாக எண்ணிவிட்டார்கள். உண்மையில் எனக்கு அறி வில்லை. மற்றவர்களுக்கும் இல்லை. ஆனால் நான் என் அறிவினத்தை உணர்ந்தேன். மற்றவர்கள் உணர வில்லை. அவ்வளவுதான் வேற்றுமை. ஆகவே, எனக்கும் உங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஆண்ட வன் பேரால் நீதி கேட்கின்றேன்”, என்று இந்தத் தள்ளாத வயதினன் தன் வாதத்தைச் சொல்லி முடித்தான். பயங்கரத் தீர்ப்பு மரணம்-மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீதிக் குழுவின் உறுப் பினர்கள் 501 பேர் தங்கள் தங்கள் வாக்கு (ஒட்) களைப் பதிவு செய்கின்றனர். எந்தப் பெட்டியின் அருகில் ஆட்கள் அதிகமாகக் கூடுகின்ருர்கள் என்று. சொல்ல முடியவில்லை. ஏறக்குறையச் சமமாகவே தெரிகின்றது. என்ன ஆகுமோ!' என்ற ஆவலோடு நீதிமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி யிருக்கின்றனர். அறிஞன் வாழ்வில் பற்றுக் கொண்ட வர்கள் வாடிய முகத்தோடும், தாழ்வில் பெருமை கொண்டவர்கள் தன்னடக்கமில்லாமல் ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தனர். ‘ஒழிந்தான் சாக்ரடீஸ்” என்று எக்காளமிடுவோரும், அவர்களை நெரித்த புருவத்தோடு பார்க்கும் நியாய சிந்தையிலிருப்போரு மாக பெரிய பரபரப்புக்கிடையே அனைவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/44&oldid=1331427" இலிருந்து மீள்விக்கப்பட்டது