பக்கம்:விஷக்கோப்பை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

விஷக்கோப்பை


42 விஷக்கோப்பை

நாட்டின் வீரத்திற்கோர் மாசு. இது சுதந்திரமல்ல; மெலிடஸ் என்ற மாபாதகன் செய்த தந்திரம் என்று கண்களைக் கனல் கோளங்களாக்கிப் பற்களை நரநர வென்று கடிக்கின்ருன் கிரீடோ. அறம் சான்ற மகன் தன் கருத்துக்களைச் சொன்னதற்கா இத் தண்டனை, பாதகத்தைச் செய்து பழிக்கஞ்சாத நாடாய்விட்டது. எழுத்துரிமை, பேச் சுரிமை, எண்ண உரிமை, தொழ உரிமை என்றெல் லாம் கிரேக்க நாட்டின் சுதந்திர சாசனத்தில் எழுதப் பட்டிருக்கும் வாசகங்கள் அவ்வளவும் பொய். ஸ்பார்ட்டா நகரக் கொள்ளைக்கூட்டத்தினர் முப்பது பேருடைய சர்வாதிகார ஆட்சியே இதைவிட மேலான தென இவ்வையகம் பேச இடம்தந்து விட்டதா என் அருமைத் தாயகம். இனி அதற்கு உய்வே இல்லையா? நல்லவர்கள் வாழ முடியாதா. யாரோ ஒரு சிலர் நன்மையடைய, பாமர மக்களை ஏமாற்ற முன்னெச்ச ரிக்கையோடு சில தந்திரக்காரர்கள் எழுதிக்கொண்ட எழுத்துஜாலங்கள். எங்கே சாக்ரடீசுக்குப் பேச்சுரிமை! அவன் மனத்தில் தோன்றிய கருத்தை, எந்தவித ஊதியமும் பெருமல் சொன்னதற்காக மரண தண்டனை. தீர்ப்பளித்தவர்கள் நல்லவர்களாகவும், நியாய சிந்தை உடையவர்களாகவுமிருந்தால் சாக்ரடீ சுக்கு மரண தண்டனையளித்திருக்கக் கூடாது. அவனே அப்படிச் சொல்லச் செய்ததே அவன் மனம், அந்த மனத்தை வேண்டுமானல் பிடித்து மரண தண்டனையளித்திருக்க வேண்டும், முடியுமா? ஐரோப் பாவின் நாகரிகப் பலகணி' என்று பெயரெடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/47&oldid=1331430" இலிருந்து மீள்விக்கப்பட்டது