பக்கம்:விஷக்கோப்பை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ ன் எ ண் ண ம் மக்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டும், அரசியல்வாதிகள் வ ர ல | ற் ைற உணர வேண்டும், மாணவர்கள் இரண்டையும் அதாவது, அறிவையும், வரலாற்று உண்மை களையும் பெறவேண்டும், எல்லாவற்றையும் விட அனைத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதாலே எனக்கு எப்போதும் ஒரு கவலையுண்டு. ஏன் ? எனக்கு நானே தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம். அதன் காரணமாகத்தான் 1952இல் பல வெளி நாட்டு அறிஞர்களைப்பற்றி எழுதத் தொடர்ந் தேன். ஒரு நூலே எழுதத் தொடங்குமுன் அதை மன்றங்களிலோ பல்கலைக் கழகங் களிலோ நான் பேசி விடுவது வழக்கம். அதே நிலையில்தான் இருபதுக்கும் .ே ம ற் பட்ட நூல்கள் வெளிவந்தன. அவைகள் தீர்ந்து விட்டபடியால் உ ல க ப் ப தி ப் ப கத்தார் மீண்டும் அவைகளை வெளியிட முன் வந்திருக் கின்றனர். முதலில் தர்க்கஞானி சாக்ரடீஸ் கொள்கைகள், அவரது வாழ்க்கைக் குறிப்புக ளடங்கி விஷக்கோப்பை என்ற தலைப்போடு வெளிவருகின்றது. நண்பர்கள் எ ன் று ம் போல் ஆதரிப்பார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. என் எழுத்துப் பணியை ஊக்குவிக்கும் அனைவர்க்கும் நன்றி. அன்பன், 15–1–1969 } சி. பி. சிற்றரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/5&oldid=910684" இலிருந்து மீள்விக்கப்பட்டது