பக்கம்:விஷக்கோப்பை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

விஷக்கோப்பை


46 விஷக்கோப்பை

சாய்த்துத் தன் நடவடிக்கையைச் சிறிது மாற்றி யமைத்துக் கொண்டிருக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாததல்ல. நான், உங்களிடத்திலே அகப்பட்டுக் கொண் டிருக்கும் என் உயிரைக் கேட்கவில்லை. நீதியையே வேண்டுகிறேன். ஏனெனில், நான் என் உயிரை யாருக்கும் சாசனமாக்க முடியாது. ஆனல் நீதியை இந்த உலகில் கடைசி காற்றின் அசைவுள்ள வரையி லும் நமது சந்ததிகளுக்குச் சாசனமாக்க முடியும். அந்த அழியாத தத்துவத்துக்காக, அணையாக ஜோதிக் காக நான் மன்ருடுகிறேன். எனினும் என்னை மாற்றம் விரும்பச் சொல்லுகின்றீர்கள், அது உங்களுக்கு விருப்பமாயின் கூறுவேன். கோபிக்காமல் கேளுங்கள். குடும்பக் கவலேயை அறவே ஒழித்து, வறுமையை விரும்பியேற்று, நீங்கள் ஒவ்வொருவரும் மனத் தூய்மையும் குணமேன்மையும் பெறுவது இன்றியமை யாதது என்று போதித்துப் பொது நன்மைக்காகவே பாடுபட்டுவந்தேன். நீங்கள் மேன்மக்களாய் வாழ வேண்டும், அதனால் நமது நாட்டின் கெளரவ மணி முடியின் ஜோதி உலகின் எல்லா பாகங்களிலும் ஜொலிக்கவேண்டும் என்ற பொது நன்மைக்காகவே பாடுபட்டு வந்தேன். இதை சமூகம் உணராமல் என்னைக் கொல்லத் தீர்மானித்து விட்டது. இது, நாட்டில் பிறந்த ஒவ்வொருவராலும் எளிதில் செய்யக் கூடிய சுலபமான காரியமல்ல. போர்க்களத்தில் எதிரியை வென்ற போர்வீரன் பரிசு பெறுகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/51&oldid=1331434" இலிருந்து மீள்விக்கப்பட்டது