பக்கம்:விஷக்கோப்பை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

49


சி. பி. சிற்றரசு 49 கள் வீசிய வலையில் நீதி அகப்பட்டுக்கெண்டு தவிக் கிறது. ஆனாலும் நீதி நித்தியமானது. அந்த அழி யாத தத்துவத்திற்காகவே நான் என் உயிரை அர்ப் பணிக்கின்றேன். தற்காலத்தில் இறப்பே யாவற்றிலும் மேன்மை தரக்கூடியது. இறப்பென்பதைக் கனவற்ற தூக்கத் திற்குச் சமமாகக்கொண்டால், அது கிடைப்பதால் எனக்கு மகிழ்ச்சியே தவிர துன்பமொன்றுமில்லை. அவ்வாறன்றிப் புராணக் கதைகளில் கூறுகிறபடி, இறப்பு புதியதோர் உலகில் புதியதோர் வாழ்வைத் தருகிறதென்பதே உண்மையாயின், அவ்வுலகிலுள்ள போர் வீரர்களுடனும், பிற மேன்மக்களுடனும் கூடிப் பழகி, நீதியைப்பற்றி ஒருவரையொருவர் உசாவி, தொடை விடைகளால் பல உண்மைகளை ஆராய்ச்சி செய்யலாம். பின்வாங்கப்போவதில்லை தவறு செய்த ஒருவன், அதை மறக்கக் கண்ணிரும் கதறலுமாக நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய பழக்கத் துக்கு மாருக நான் ஒரு புது மாதிரியிலே நின்றேன் என்பதால், நான் உங்களிடம் என் வாதத்தைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, மனிதத்தன்மை யல்லாத ஒன்றுக்காக வாதாட வேண்டுமென்று நினைத்து, அதனல் வரப்போகும் ஆபத்தையும் எண்ணுமல் தைரியமாக நின்றேனே. அதையேதான் இப்போதும் செய்ய நினைக்கின்றேன். - நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், நீங்கள் உங்கள் நீதியை நிலைநாட்டவும் எடுத்துக்கொண்ட வி-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/54&oldid=1331437" இலிருந்து மீள்விக்கப்பட்டது