பக்கம்:விஷக்கோப்பை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

51


சி. பி. சிற்றரசு 5 I கின்ற கொள்கைகளை எளிதாக்கிய எனக்கு மரண தண்டனை. என் அருமை நண்பர்களே! ஏதன்ஸ் நகரப் பெருமக்களே ! என்ருவது ஒர் நாள் இந்த நீதியின் நெடும் பயணத்தை நியாய சிந்தனையுள்ளவர்கள் அளந்து பார்த்துவிடுவார்கள். அதுவரை இந்த சாக்ரடீஸ் உயிரோடிருக்கப் போவதில்லை. அதற்குள் அகில முழுதும் அழிந்துவிடப் போவதில்லை. சாக்ரடீஸ் சாக வேண்டிய நாட்களுக்கு முன்பு சாகடிக்கப் பட்டால், அவன் வாழ்வில் மிகுதியான நாட்கள் வேறு யாருடைய வாழ்விலும் ஒட்டிக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் 100 ஆண்டுகள் ஆயுள் என்று நிர்ணயித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஒருவனவது சரியாக 100 ஆண்டுகள் வாழ்ந்து இறந்ததாகத் .ெ த ரி ய வில்லை. அஃது உண்மையாயின் இறப்பு தன்னை அடையாளங்கண்டு கொண்டு வருவதற்குமுன், தானே இறப்பைக் கண்டு கொள்ளலாம். அப்படி யாரும் கண்டுகொண்டதாக வும் தெரியவில்லை. வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு வெளியே சென்றவர்கள் வீதியி லேயே கொல்லப்படுகிருர்கள். அநியாய வழியில் சேகரித்த பொருளைக் காப்பாற்றும் முயற்சியில் திருடன் கை வாளால் பலர் கொல்லப்பட்டிருக்கின் ருர்கள். கருத்தரித்தபோது மனைவியிடம் சந்தோஷ மாக விடை பெற்றுச் சென்ற வீரர்களில் பலர் வீடு திரும்பியதில்லை. ஆண்டி அரசனாக எ டு த் து க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/56&oldid=1331439" இலிருந்து மீள்விக்கப்பட்டது